சிறப்புக் கேள்வி : உளவியல் மருத்துவர் ஷாலினி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 27, 2020

சிறப்புக் கேள்வி : உளவியல் மருத்துவர் ஷாலினி


கேள்வி 1: ‘திராவிடர் கழகம் என்று ஒன்று இல்லை; பெரியார் என்றே ஒருவர் இருந்திருக்கவில்லை’ என்றால், தமிழக வரலாறு எப்படி இருந்திருக்கும்?


கேள்வி 2: சமத்துவ சமூகத்தை உருவாக்குவதற்குப் பெரியாரின் ஃபார்முலா என்ன? சமூகநீதியில் அவர் செய்து விட்டுப் போயிருக்கும் பணிகள் தவிர, நாம் செய்துமுடிக்க வேண்டிய பணிகள் என்னென்ன?


பதில்: டாக்டர் ஷாலினி அவர்களுக்கு நன்றி. இரண்டு கேள்விகளுக்குமே பதில் கூறுவதில் மகிழ்ச்சி.


முதல் கேள்விக்குப் பதில்: நீங்கள் டாக்டர் ஷாலினியாகி, இப்படி துடிப்புடன் எழுதி கேள்வி கேட்கும் துணிவைப் பெற்றிருக்கவே முடியாது; நானும் ‘ஆசிரியராகி‘ இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வாய்ப்பையும் பெற்றிருக்க முடியாது! உங்கள் தலை இப்போது இருப்பதைப் போல ‘கிராப்’பாகி  இருக்காது.  என் தலையில் குடுமி இருந்திருக்கும்.


உங்கள் கையில் “கரண்டியும்’, என் கையில் மாடு மேய்க்கும் கோலும் தான் இருந்திருக்கும்! இல்லையா?


இரண்டாவது கேள்விக்குப் பதில்: சமவாய்ப்பு - சம ஈவு, பேதம் எந்த உருவத்திலும் கூட இல்லாத நிலை, சம மதிப்பு - இவை மனிதர்களுக்கு அவர்களது பிறவி பேதமாகவோ, அல்லது இடையில் புகுத்தப்பட்டதாகவோ இருப்பது ஒழிக்கப்படல்.  பிறவி பேதம் என்பதில் ஜாதி, பெண்ணடிமை - பாலின பேதம் ஆகியன உள்ளடக்கம். அதனை ஒழித்து விடுதல் கவலையற்ற வாழ்வைத் தரும் என்பார் பெரியார்.


தந்தை பெரியார் ஓர் உதாரணம் கூறுவார், “எல்லோருக்கும் இரண்டு கை இருக்கும்போது யாருக்கும் கவலை இல்லை; சிலருக்கு மட்டும் மூன்றாவது கையிருந்து முதுகு சொறிய வசதி, மூன்றாவது கண்ணிருந்து பின்னால் குத்த வருபவரைக் கண்காணிக்கும் வாய்ப்பு இருந்தால், அந்த பேத நிலை பெருங் கவலையை உருவாக்காதா சிலருக்கு?”


அவரது சமத்துவத்திற்கான ஃபார்முலா, சுயமரியாதை இயக்கம் துவங்கியபோது ஒரே வாக்கியத்தில் சொன்னாரே, “அனைவர்க்கும் அனைத்தும்!” இதில் எல்லாமும் அடங்கிவிட்டது - ‘பேதமிலாப் பெருவாழ்வு’ அவ்வளவுதான்.


நாம் முடிக்க வேண்டிய பணிகள்:



  1. சமூகநீதியிலேயே பல பணிகள் நிலுவையில் உள்ளன - செய்து முடிப்போம் - பெற்றதைவிட பெறாதது உலகளவு.

  2. பாலின நீதியில் நெடுந்தூரப் பயணம் செல்ல வேண்டியிருக்கிறது.

  3. பண்பாட்டுப் படையெடுப்பினால் நம் மக்கள் மூளையில் போடப்பட்டுள்ள கண்ணுக்குத் தெரியாத கொடுமையான விலங்குகளை உடைத்தெறியப் பகுத்தறிவு நெறியைப் பரப்பும் பணி மலைபோல் உள்ளது; சிலைபோல் இருக்க முடியுமா - நாம்?


No comments:

Post a Comment