என் கடன் பணி செய்து கிடப்பதே! - கலைஞர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 3, 2020

என் கடன் பணி செய்து கிடப்பதே! - கலைஞர்

என் பொதுவாழ்வுப் பயணத்தில் இடர், துயர், இன்பம், துன்பம், எதிர்ப்பு, ஆதரவு, ஏச்சு, பேச்சு, இழிவு, பழி என எத்தனையோ விதவிதமான நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது என்னை ஆளாக்கிய பெரியாரை யும், அரவணைத்து வழி நடத்திய அண்ணாவையும் நினைத்துக் கொண்டு இலட்சியத்தில் இம்மியளவும் சறுக்கல் இல்லாமல் எச்சரிக்கையுடன் நடந்துகொண்டிருக்கிறேன். கழக உடன் பிறப்புகளையும் - அன்பெனும் அமுதூட்டி ஆதரவுக் கரம் நீட்டித் துணை நிற்கும் கோடிக்கணக்கான தமிழ்ப்பெருமக்களையும், அரசியலுக்கும், கட்சிப் பிரச்சினைகளுக்கும் அப்பாற்பட்டு வாழ்த்தி வருகின்ற அனைத்து நெஞ்சங்களையும், தூய துணை களாகக் கொண்டு - இந்தத் துணைகள் என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் - இருக்க வேண்டுமென்ற வேண்டுகோளுடன் எஞ்சியுள்ள பயணத்தைத் தொடருகிறேன். “என் கடன் பணி செய்து கிடப்பதே!”


No comments:

Post a Comment