டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்கள் பணிபுரிந்த மாநிலங்களில், அரசுகள் சரிவர அவர்களைப் பாதுகாக்காத காரணத் தால், சுமார் முப்பது லட்சம் தொழிலாளர்கள் பீகார் மாநிலத்திற்கு திரும்பியுள்ளனர் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார். அவர்களுக்கான வேலைவாய்ப்பை பீகாரிலேயே உருவாக்கிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
- கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எழுந்துள்ள ஆர்ப்பாட்டத்தையும்,கலவரத்தையும் ஒடுக்க ராணுவத்தை அழைப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு, அமெரிக்க நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் மார்க் ஈஸ்பர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
- ஈரான் அதிபர் அயோத்துல்லா கொமொனி, உலகத்திற்கு மனித உரிமை பேசும் அமெரிக்காவின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என்று கூறி உள்ளார்.
- போப் பிரான்சிஸ், இனவெறி நடைபெறுவதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது என்று கூறி உள்ளார்.
- அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜன நாயகக் கட்சியின் வேட் பாளராக அறிவிக்கப்பட உள்ள ஜோ பீடன், டிரம்பின் நடவடிக்கை, அமெரிக்கா இதுவரை காத்துவந்த ஜனநாயக நெறிகளை உடைத்து விட்டது என்று கூறி உள்ளார்.
டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:
- இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்து விட்டதா என்பதை மோடி நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:
- கரோனா தொற்று மேலும் பரவாமல் தடுத்திட, வெளியூரில் இருந்து விமானம், பேருந்து, ரயில் மூலமாக டில்லிக்கு வரும் அனைவரும் ஒரு வாரம் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
தி இந்து, சென்னை பதிப்பு:
- இந்தியா என்பதை பாரத் என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஏற் கெனவே, அரசமைப்புச் சட்டத்தில் ‘பாரத்’ என்ற பெயர் உள்ளது. வேண்டுமெனில், மனுதாரர் அரசிடம் கோரிக்கை வைக்கட்டும் என்று தலைமை நீதிபதி போப்டே கூறினார். தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
எகனாமிக் டைம்ஸ், மும்பை பதிப்பு:
- புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பயணச் செலவை மத்திய அரசு ஏற்கவில்லை என மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது, இதுவரை மோடி அரசு 85% செலவை ஸ்ராமிக் ரயிலுக்காக செலவிட்டோம் எனக் கூறி வந்ததற்கு மாறாக இருப்பதாகவும், பொய்யான தகவல் தந்த ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
- குடந்தை கருணா,
4.6.2020
No comments:
Post a Comment