சுயமரியாதைச் சுடரொளி தூத்துக்குடி த.சு.பலவேசம் (நிறுவனர், த.சு.பலவேசம் அன் கோ) அவர்களின் வாழ்விணையரும், "சுயமரியாதைச் சுடரொளி, மானமிகு ப.சுப்பு இரத்தினம் அவர்களின் (தூத்துக்குடி கப்பல் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்ட தோழர்) தாயாரும்," தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியாரடியான் அவர்களின் அன்புச் சித்தியுமான திருமதி ப. பசுபதி சுப்பம்மாள் பலவேசம் அவர்களின் முதலாண்டு நினைவு நாள் இன்று (4.6.2020) கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் நினைவாக 86-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து, இலட்சக்கணக்கான் தமிழர்கள் சந்தா செலுத்தாமலேயே படிக்க வசதி செய்யப்பட்டுள்ள 'விடுதலை' ஏட்டிற்கு வளர்ச்சி நிதியாக, பெரியாரடியான் ரூ.2,000 நன் கொடையாக வழங்கியுள்ளார்.
இறுதிக்காலத்தில் வாழ்ந்த தூத்துக்குடியிலுள்ள 'லிட்டில் சிஸ்டர்ஸ்' முதியோர் இலவச இல்லத்தில் வசிப்போர்க்கு மதிய உணவு வழங்க பெரியாரடியான் ரூ.4,500 வழங்கியுள்ளார்.
- - - - -
இயக்கத்திற்கு தொண்டு புரிந்தே தனது இறுதி மூச்சு வரை இயங்கிக் கொண்டிருந்த பெரியார் பேருரையாளர் - சுயமரியாதைச் சுடரொளி - பேராசிரியர் இறையனார் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (4.6.2020) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000த்தை அவரது மகன் இசையின்பன் - பசும்பொன் செந்தில்குமாரி வழங்கினர்.
No comments:
Post a Comment