தஞ்சாவூர் ஒன்றியம், புதுமாத்தூர் பெரியார் பெருந்தொண்டர் பெரியசாமி (வயது 89) 1.6.-2020 அன்று இரவு 9.30 மணியளவில் உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம் அவரது தொண்டிற்கு வீரவணக்கம் இன்று 2.6.-2020 மாலை 4 மணியளவில் சென்னை அண்ணா நகர் கிழக்கு-அவரது இல்லத்திலிருத்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது மகன் பெ.அன்பழகனிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.
முகவரி: பெ.அன்பழகன் (மகன்) 175P- பிளாக் 4ஆவது தெரு, அண்ணா நகர் கிழக்கு, சென்னை - 102, தொடர்புக்கு: 9003076416.
- - - - -
பெரியார் மணியம்மை மருத்துவமனையின் இயக்கவியல் மருத்துவர் (பிசியோதெரபிஸ்ட்) ஏ.கே.அப்துல் ஜாபர் அவர்களின் தாயார் ஷாகினா (வயது 56) இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தகவலறிந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறு தலையும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment