‘விடுதலை' என்ற சொல் உன்னதமானது- உயர்ந்த சீலத்தை அடிப்படையாகக் கொண்டது - மனிதன் சுதந்திர மானவன் - சுயமரியாதைக்காரன் - இதற்குத் தடையாக இருப்ப வர்களை - இருக்கும் சக்திகளை வீறுகொண்டு எழுந்து உடைத்துச் சின்னாபின்னமாக்கி உண்மை யான மனிதனாக்கும் தத்துவத் திற்கும், போர்க் குரலுக்கும் ஒட்டு மொத்தமான ஒப்பாரும் மிக்கா ரும் இல்லாத சொல்தான் ‘விடுதலை.'
விடுதலை என்பதற்கு வெண் தாடி வேந்தர் தந்தை பெரியார் கூறும் விளக்கம் என்ன?
‘‘எது விடுதலை? வயிற்றுக் குக்காக வாழ்வது விடுதலையா? உத்தியோகம் பெறுவது விடுத லையா? மனிதன் சமூக பொரு ளாதார வாழ்வில் மற்றவனுக்குத் தாழ்ந்தவன் அல்லன் என்ற எண்ணம் உதித்து, அது கைகூடி விட்டால், அதுதான் விடுதலை யாகும்.
விடுதலை என்பதற்கு இதுவே தகுந்த பொருளாகும். உங்களுக்கு மேல் உயர்ந்த ஜாதியார், செல்வந்தன், அதிகாரி இவர்கள் இருந்தால், அது ஒரு நாளும் விடுதலை ஆகாது!'' (‘குடிஅரசு', 27.11.1932) என்று கூறும் தந்தை பெரியாரின் ஆழ் கடல் முத்தில் ஒளியைக் காணுங் கள்.
தன்னால் நடத்தப்படும் ஏட்டுக்கு ‘விடுதலை' என்று ஏன் பெயர் சூட்டினார் என்பதை சுத்தமான குருதியோட்டத்தோடு படியுங்கள்! படியுங்கள்!!
அறிஞர் அண்ணா அவர்கள் ‘விடுதலை'யின் ஆசிரியராக குறு கிய ஒரு கால அளவில் (1939-41) பணியாற்றியிருக்கிறார். அண் ணாவின் எண்ணவோட்டம் ‘விடுதலை'ப்பற்றி என்னவாக இருந்தது?
‘‘திராவிடனே! உன் சமுதாயம் சேறும், பாசியும் நிறைந்த குட்டை போல் ஆகிவிட்டது. சேறும், பாசியும் நிரம்பிய குட்டையி லுள்ள நீரை எவரே விரும்புவர்? அந்த நீர் குடிப்பதற்கோ, குளிப் பதற்கோ முடியாதபடி ஆக்கப் பட்டுவிட்டது; எனவே, அதை உபயோகித்து, உன் உடலை நோய்க்கு ஆளாகும்படி செய்து வதைந்து போகாதே, சேற்றை அகற்றிப் பாசியை நீக்கித் துப் புரவு செய்து உபயோகப்படுத்திக் கொள்'' என்று ‘விடுதலை' கூறு கிறது.
‘‘கீழ்த்தர ஜாதியாய், நான்காம், அய்ந்தாம் ஜாதியாய் ஆக்கப் பட்டுவிட்டாய் - உழைத்தாலும் உழைப்பின் பயனை அடைய முடியாதபடி செய்யப்பட்டு விட் டாய், பொருளாதாரத்தில் நசுக் கப் பட்டு விட்டாய், கல்வியில்
100-க்கு 90 பேர் தற்குறிகளாய் இருக்கும் கொடுமையைப் பெற்று விட்டாய், அரசியலிலோ, பிற துறைகளிலோ கேவலம் கீழ்த்தர சிப்பந்தியாய் சீர்குலைக்கப்பட்டு விட்டாய்'' என்று கூறி, திராவிடப் பெருங்குடி மக்களுக்கு அறி வுறுத்தியும், புத்துணர்ச்சியையும், வாழ்க்கைத் துறையில் வளர்ச்சி யையும் பெறும்படி ‘விடுதலை' பணியாற்றி வருகிறது'' (‘திராவிட நாடு', 27.6.1948, தலையங்கம்).
‘விடுதலை' ஏட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் ஜாமீன் கேட்கிறது அரசு என்ற நிலையில், சீற்றமும், சினமும் கொண்டு அண்ணாவால் தீட்டப்பட்ட எழுத்து எரிதழல் இது!
- மயிலாடன்
No comments:
Post a Comment