கெஜ்ரிவாலுக்கு கரோனா பரிசோதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 9, 2020

கெஜ்ரிவாலுக்கு கரோனா பரிசோதனை

புதுடில்லி, ஜூன் 9- டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று முன்தினம் காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டது. இது கரோனாவுக்கான அறிகுறியாக இருக்கலாம் என கருதி, அவர் தன் னைத் தானே தனிமைப் படுத் திக்கொண்டார். அத்துடன், தனது நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகள் அனைத்தையும் ரத்து செய்தார்.


இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று (9.6.2020) கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோ தனை முடிவுகள் இன்று இரவு அல்லது நாளை காலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


டில்லியில் கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 29 ஆயிரத்து 943  பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 874 பேர் உயிரிழந்திருப்பது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.


No comments:

Post a Comment