கடலூர், ஜூன் 28- கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மண்டல திராவிடர் கழக இளைஞரணி சார்பில், புரட் சிக் கவிஞர் பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது பகுத்தறிவே, ஜாதி ஒழிப்பே, பெண் விடுதலையே எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
நிகழ்வில், கடலூர் மண் டல இளைஞரணி செயலா ளர் நா.பஞ்சமூர்த்தி வரவேற் புரையாற்றினார். திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரை யன் தலைமை ஏற்று உரை யாற்றினார். புதுவை இளை ஞரணி தலைவர் தி.இராசா முன்னிலை வகித்தார். திரா விடர் கழகப் பொதுச் செய லாளர் இரா.ஜெயக்குமார் பட்டிமன்றத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, புரட்சிக் கவிஞர், தந்தை பெரியார் கருத்துகளை கவிதை வடிவில் தமிழ்ச்சமுதா யத்துக்கு வழங்கினார். அவ ரது பிறந்த நாளை முன்னிட்டு கழக இளைஞரணி சார்பில் நடைபெறும் பட்டிமன்றமானது பாராட்டுக்குரியது என்று பேசினார்.
இதனையடுத்து, புரட்சிக் கவிஞர் படைப்புகளில் விஞ்சி நிற்பது பகுத்தறிவே, ஜாதி ஒழிப்பே, பெண் விடுதலையே எனும் தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேக ரனை நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் தொடங்கியது. புரட்சிக் கவிஞர் தன் படைப் புகளில் பெரியார் மேடை களில் முழங்கிவந்த தன் கொள்கைகளை கவிதை வடிவில் எளிய மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக் குரியவர் ஆவார்.
திராவிட இயக்க சிந்தனை யில் ஊறிய புரட்சிக் கவிஞர் தன் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுக்காகவும், ஜாதி ஒழிப்புக்காகவும், பெண் விடு தலைக்காகவும் எழுதியும், மேடைகளில் முழங்கியும் வந்தவர். எனவே, இந்த தலைப்பில் பரப்பரப்பான பட்டிமன்றம் இளைஞரணி தோழர்களால் நடத்தப் படுவது வரவேற்புக்குரியது எனப்பேசினார்.
இதனையடுத்து, பகுத்த றிவே எனும் தலைப்பில் திரா விடர் கழக தலைமைக் கழகச் சொற்பொழிவாளர் யாழ்.திலீபன், கடலூர் மண்டல செயலாளர் நா.தாமோதரன் ஆகியோரும், ஜாதி ஒழிப்பே எனும் தலைப்பில் திராவிடர் கழக தலைமைக் கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி, மாநில மகளிர் பாசறை அமைப்பா ளர் சட்டக்கல்லூரி மாணவர் சே.மெ.மதிவதனி ஆகியோ ரும், பெண் விடுதலையே எனும் தலைப்பில் பேராசிரி யர் மு.சு.கண்மணி, வழக்கு ரைஞர் ம.வீ.அருள்மொழி ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக, தந்தை பெரியார் தன் வாழ்நாளெல்லாம் எப் படி ஜாதி ஒழிப்பிற்காக உழைத்தாரோ அதே போல புரட்சிக் கவிஞர் பெண் விடு தலை, பகுத்தறிவு என அனைத் துத் தலங்களிலும் இயங்கினா லும் ஜாதி ஒழிப்புக்காக அதிக படைப்புகளை உரு வாக்கினார். எனவே, புரட்சிக் கவிஞரின் படைப்புகளில் விஞ்சி நிற்பது ஜாதி ஒழிப்பு எனக்கூறி நிறைவு செய்தார்.
கூட்டத்தில், புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீர மணி, அமைப்புச் செயலாளர் வே.செல்வம், கடலூர் மண்ட லத் தலைவர் அரங்க. பன்னீர்செல்வம், விழுப்புரம் மண்டலத் தலைவர் க.மு. தாஸ், மண்டலச் செயலாளர் குழ.செல்வராசு, விருத்தா சலம் மாவட்டத் தலைவர் அ. இளங்கோவன், மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல் வன், மதுரை மண்டலச் செய லாளர் பவுன்ராசா, கடலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், விருத் தாசலம் மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் வெங் கட.ராசா. புதுக்கோட்டை மண்டல இளைஞரணி செய லாளர் வீரய்யா, சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ், காரைக்கால் மண்டலச் செய லாளர் கிருட்டினமூர்த்தி, திருச்சி பெல் ஆறுமுகம், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தங்கராசு உள்பட 100 பேர் பங்கேற்றனர்.
நிறைவாக விழுப்புரம் மண்டல இளைஞரணி செய லாளர் தா.இளம்பரிதி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment