சென்னை,ஜூன்3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97ஆவது பிறந்தநாள் இன்று (3.6.2020) கொண்டாடப்படுகிறது. இன்று அவரது நினைவிடத்தில் தமிழக எதிர்க் கட்சித் தலைவர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட் டோரும் மரியாதை செலுத்தினர்.
கலைஞர் நினைவிடத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் எளிய முறை யில் சுயமரியாதைத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின், துரை முருகன், டி ஆர் பாலு, கனிமொழி மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்டோர் கலைஞர் நினை விடத்தில் இணையேற்பு விழாவை நடத்திக் கொண்ட மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment