திராவிடர் கழகம், பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் மாலை வைத்து மரியாதை
திருச்சி, ஜூன். 5 திருச்சி விடுதலை வாசகர் வட்டத்தின் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், பெரி யார் பன்னாட்டு அமைப்பின் தலை வர் பிச்சாண் டார் கோவில் டாக்டர் சோம.இளங்கோவனின் சகோதர ரான பொறியாளர் சோம.பொன்னு சாமி 2.6.2020 அன்று சாலை விபத் தில் மறைவுற்றார். அவரது உடலுக்கு திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பெரியார் கல்வி நிறுவ னங்கள் சார்பில் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக ஒருங்கிணைப்பாளர் ஆர்.தங் காத்தாள், கழக மாவட்ட தலைவர் ஞா.-ஆரோக்கிய ராஜ் ஆகியோர் சென்று மறைந்த பொன்னுசாமி உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி அவரது வாழ்விணையர் மல்லிகாவிற்கு ஆறுதல் கூறினர்.
மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை, துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, பேரா சிரியர் இஸ்மாயில், பெரியார் மெட்ரிக் பள்ளி முதல்வர் க.வனிதா, மணிமொழி, பெரியார் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் விஜய லட்சுமி, கழக மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், ப.க. தலைவர் மதி வாணன், செயலாளர் மலர்மன்னன். துரைசாமி, மணியன், இளங்கோவன், ஜெயராஜ், கனகராஜ், குணசேகரன், மகளிர் பாசறை தலைவர் அம்பிகா, கண்ணன், முபாரக் உள்ளிட்ட தோழர்கள் மற்றும் செந்தில் சுந்தரம், அவரது வாழ்விணையர் மகேஷ்வரி, வழக் குரைஞர் சரவணன் ஆகியோர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
ஆசிரியர் அறிக்கை
மறைந்த பொறியாளர் பொன்னு சாமி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘விடுதலை’யில் இரங்கல் அறிக்கை வெளியிட்டி ருந்தார்.
இரங்கல் கூட்டம்
ஜூன் 3 ஆம் தேதி மதியம் 2 மணி யளவில் மறைந்த பொன்னுசாமி இல் லத்தில் இரங்கல் கூட்டம் மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலை மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மறைந்த பொன் னுசாமி அவர்கள் குடும்பத்தின் சார் பில் யோகா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் அறிவழகன், அண் ணாமலை பல்கலைக்கழக பேரா சிரியர் டாக்டர் அண்ணாமலை, பேராசிரியர்கள் ப.சுப்ரமணியன், இரா.செந்தாமரை, மண்டல செய லாளர் ப.ஆல்பர்ட் ஆகியோர் இரங்கல் உரை யாற்றினார்.
எவ்வித மூடசடங்குகள் இல்லா மல் திருச்சி ஓயாமரி மின்மயானத்தில் உடல் எரியூட்டப்பட்டது. மேற் கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் சிகாகோவில் உள்ள அவரது சகோ தரரர் டாக்டர் சோம.இளங்கோவ னுக்கு காணொலி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. இறுதி ஊர் வ லத்தில் கழக தோழர்கள், உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர்.
No comments:
Post a Comment