ஏட்டுத் திக்குகளிலிருந்து.. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 3, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து..

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • இந்தியாவில் கரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியது. கடந்த 15 நாட்களில் ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது. இதே நிலை தொடரு மானால், அடுத்த 15 நாட்களில் நான்கு லட்சமாகவும், இம்மாத முடி வில் எட்டு லட்சமாகவும் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

  • அமெரிக்காவில் கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எழுந்துள்ள போராட்டம் மற்றும் கலவரத்தை அடக்க இராணுவத்தை அனுப்பிட உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

  • மோடி ஆட்சியின் ஒரு ஆண்டு (2019-20) நிறைவு மக்களிடம் எந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை. வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையிலும், மோடிக்கும், அவரது சகாக்களுக்கும், தற்போது உள்ள பொருளாதார சரிவும், சாமான்ய மக்களின் வேதனையும் புரியவில்லை என பத்திரிக்கையாளர் பர்சா வெங்கடேஷ்வர் ராவ் (ஜூனியர்) தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.


டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:



  • தமிழ் நாட்டில் வரும் ஜூன் 11-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்கக் கோரி, தமிழ் நாடு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

  • மருத்துவ படிப்பில் அகில இந்திய தொகுப்பில் தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டின்படி மாணவர்களுக்கு இடங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி யின் சார்பில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உ.பலராமன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

  • நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 225 தலைவர்கள், கரோனா தொற்று தடுப்புப் பணிக்காக 2.5 டிரில்லியன் டாலர் ஒதுக்க வேண்டும் என்றும் இது குறித்து விவாதிக்க ஜி-20 நாடுகள் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். (ஒரு டிரில்லியன் டாலர் = ரூ.72,00,000 கோடியாகும்).


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:



  • கொரோனா தொற்று காரணமாக, கல்லூரி விடுதிகளில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டிய சூழலில், இந்த கல்வியாண்டில் உயர்ஜாதி அரியவகை ஏழைகளுக்கான 10% இடங்களை அய்.அய்.டி. யில் அதிகரிப்பது கடினம் என்றும், ஓராண்டு தள்ளி வைக்கவும், அய்.அய்.டி. நிர்வாகங்கள் கூட்டாக மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்பட்டது ஒரு திருப்பத்தை ஏற்படுத்துமா? ஆனால், ஆறா வடுவை மக்களிடம் ஏற்படுத்திவிட்டது என தலையங்கச் செய்தி கூறுகிறது.

  • சமத்துவத்தைப் பேணும் நாடு என்று சொல்லப்பட்ட அமெரிக் காவில் கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்பட்ட செயல், அந்த நாட்டில் இன்னமும் நிறவெறி நீங்கவில்லை என்ற உண்மையை உணர்த்திவிட்டது என அமெரிக்க பிரவுன் பல்கலைக் கழகப் பேராசிரியர் அசுதோஷ் வார்சினி தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


தி இந்து, சென்னை பதிப்பு:



  • மோடி அரசு பொருளாதாரத்தைக் கையாளும் முறை, குப்பைக்கு நிகரானது என மூடீஸ் எனும் முதலீட்டாளர்கள் சேவை அமைப்புக் கூறியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக அரசைச் சாடியுள்ளார். இன்னமும் பொருளாதார வீழ்ச்சி மோசமான நிலையை அடையும் என்றும் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


எகனாமிக் டைம்ஸ், மும்பை பதிப்பு:



  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் - சிந்து வங்கி ஆகிய வங்கிகளை தனியார் வங்கிகளாக ஆக்கிட மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.


- குடந்தை கருணா,


2.6.2020


No comments:

Post a Comment