ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 30, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரியம், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பாடங்களில் 30 விழுக்காட்டை நடப்பு கல்வி ஆண்டில் குறைத்திட முடிவு செய்துள்ளது.

  • இந்திய எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் இல்லை என பிரதமர் மோடி சொல்வதுதான் தேசியத்திற்கு எதிரானது என எழுத்தாளர் ஆகார் படேல் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

  • காஷ்மீர் மக்களுக்கு எதிராக அரசமைப்புச் சட்டம் 370அய் ரத்து செய்ததுடன், தற்போது ஒரே நேரத்தில் 25000 பேரை வெளி மாநிலத் தில் இருந்து காஷ்மீர் பகுதிக்கு குடியேற்றம் செய்வது, ஒப்பந் தந்தை மீறும் செயல் என தலையங்க செய்தியில் கூறப்பட்டுள்ளது.

  • இந்திய-சீன எல்லையில் பதற்றம் உள்ள சூழலில், மக்கள் அனை வரும் அரசின் பின்னால் நிற்கிறார்கள். ஆனால், அரசு மக்களிடம் வெளிப்படையாக செய்திகளைத் தெரிவிக்க வேண்டும். 1962இல் நடந்த இந்திய-சீனப் போரை தற்போது காரணம் காட்ட முடியாது. அன்றைய நிலையில், நமது ராணுவத்தைவிட அய்ந்து மடங்கு சீன ராணுவம் எண்ணிக்கையில் பெரியது. யாரும் எதிர்பாராத சூழலில், பல மாதங்களுக்கு முன்னரே, சீனா ராணுவத்தை இந்திய எல்லை யோரத்தில் குவித்து வைத்திருந்தது என கட்டுரையாளர் ஆனந்த் கே.சகாய் குறிப்பிட்டுள்ளார்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவைப் பிறப்பித்து உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் 30.6.2020 நள்ளி ரவு முதல் ஜூலை 31ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • கோவில்பட்டி மாஜிஸ்டிரேட் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமலும், தரக்குறைவாக பேசியதாகவும், சென்னை உயர் நீதிமன்றத் தின் மதுரை அமர்வு சாத்தான்குளம் காவல் துறை அதிகாரிகளைக் கண்டித்துள்ளது. காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைவரும் மாற்றப்பட்டு, புதிய கான்ஸ்டபிள்கள், இன்ஸ்பெக்டர் என 29 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தி இந்து, டில்லி பதிப்பு:



  • வெஸ்ட் பேங்க் பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்வது சட்ட விரோதமானது என அய்க்கிய நாடுகள் மனித உரிமைத் தலைவர் கண்டித்துள்ளார்.

  • தேசிய பாதுகாப்புச் செயலாளராக இருந்த எம்.கே. நாராயணன், லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவலைக் கண்காணிக்க உளவுத் துறை தவறிவிட்டது என்று ஊடகப் பேட்டியில் கூறியதைக் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் சுட்டிக்காடியுள்ளார்.

  • நாட்டின் உணவு தானியங்கள் தன்னிறைவில் உள்ளது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்பது கதைக்கு உதவாது. ஒட்டு மொத்த பொது விநியோகத் திட்டம் தற்போது தேவை என டில்லி அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியர் தீபா சின்கா கட்டுரையில் தெரிவித்து உள்ளார்.

  • சீன நிறுவனங்களிடம் இருந்து மோடி அரசின் பி.எம். கேர்ஸ் டிரஸ்டிற்குப் பெற்ற நன்கொடையை திருப்பி அனுப்ப வேண்டும் என பஞ்சாப் முதல்வர் அமிர்ந்தர் சிங், மோடி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • டில்லியில் உள்ள தேசிய சட்டக்கல்லூரிப் படிப்பில் 50% இடங்களை தில்லியில் வசிப்போர்க்கு ஒதுக்கீடு அளிக்கும் கேஜ்ரிவால் அரசின் ஆணைக்கு, தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

  • சீன நாட்டில் தயாரிக்கப்பட்ட டிக் டாக் உள்ளிட்ட 59 செயலி களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:



  • பிற்படுத்தப்பட்டோர்க்கான நாடாளுமன்றக் குழு 29.6.2020 அன்று கூடியது. மருத்துவக் கல்விப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட சூழலில், சுகாதாரத் துறைச் செயலாளர் குழுவின் முன் அழைக்கப்பட்டு இப்பிரச்சினை விவாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய முடிவுகளை அரசு விரைவில் அறிவிக்கும் என குழுவின் தலைவர் கணேஷ் சிங், எம்.பி. தெரிவித்துள்ளார்.


- குடந்தை கருணா,


30.6.2020


No comments:

Post a Comment