மருத்துவக் கல்வியில் மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 5, 2020

மருத்துவக் கல்வியில் மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதி!

50  விழுக்காட்டினை உடனடியாக நிரப்ப சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில் வழக்கு



சென்னை ஜூன் 5 சமூகநீதி இயக்கமான திராவிடர் கழகம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 விழுக்காட்டினை உடனடியாக நிரப்பவேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.


 மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, ”அனைத்து மாநில அரசுகளும் முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 விழுக்காடு மத்திய அரசுக்கு ஒதுக்கவேண்டும், இதனடிப்படையில் இந்த ஆண்டு மருத்துவ முதுநிலை படிப்பிற்கான 7,981 இடங்களும், பல்மருத்துவ முதுநிலைக்கான 274 இடங்களும் வழங்கப்பட்டுள்ளது.



இவ்வாறு வழங்கப்பட்ட இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டிய இடங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இடஒதுக்கீட்டின் படி இடங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு உத்தரவாதச்சட்டம் பிரிவு 9(4) 2018-இன் கீழ் வழங்கப் பட்டிருக்க வேண்டும்.


2017-ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கான இடங்கள் மறுக்கப்பட்டுள்ளன, இது அரசமைப்புச் சட்டம் 15(5) மீறிய செயலாகும். மேலும் பிரிவு 9(4)ம் இங்கு மீறப்பட்டுள்ளது.



 தற்போது தமிழ்நாடு அரசு தன்னுடைய மருத்துவக் கல்விக்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டின் படி 941 இடங்களை ஒதுக்கி உள்ளது. இதில் பொதுப்பிரிவினருக்கு 732, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 14, பழங்குடியினருக்கு 68 என்று ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒரு இடம் கூட வழங்கப்படவில்லை.


 இந்த 941 இடங்களில் தமிழ் நாடு அரசு சிறப்பு இட ஒதுக்கீட்டு கொள்கையின் படி மத்திய அரசு முழுமையாக இட ஒதுக்கீட்டு சட்டவிதிமீறலில் ஈடுபட்டுள்ளது. சட்டப் பிரிவு 15(4) பிரிவு 15(5)-அய் மத்திய அரசின் மனிதவளத் துறை முழுமையாகப் புறக்கணித்துள்ளது. மனிதவளத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அகில இந்திய மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கை முடிவு 09.5.2020 அன்று வெளி யானது. இதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் மறுக்கப்பட்டுள்ளன.


மத்திய அரசு 50 விழுக்காடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டவருக்கான இடங்களை வழங்க உத்தர விடவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.   இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.


No comments:

Post a Comment