உண்டியல் பணத்தை கரோனா நிதியாக வழங்கிய மாற்றுத்திறனாளிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 9, 2020

உண்டியல் பணத்தை கரோனா நிதியாக வழங்கிய மாற்றுத்திறனாளிகள்


ஈரோடு, ஜூன் 9-  ஈரோடு கைக் கோளம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் காதர் மொய்தீன். இவர் ஈரோட்டில் பள்ளிக் கூட மற்றும் அலுவலக பைகள் உற்பத்தி மற்றும் விற் பனை தொழில் செய்து வரு கிறார்.


இவருக்கு பெர்னாஷ் அலி, பாஷிகா நிஷா என்று 2 மகள்கள் உள்ளனர். இவர் கள் 2 பேரும் இரட்டையர். பிறக்கும்போதே கை, கால்கள் மாற்றுத்திறன் கொண்டவர் களாக பிறந்தனர். தற்போது இவர்கள் 2 பேருக்கும் வயது 16 வயது ஆகிறது.


பெற்றோர் மற்றும் உதவி யாளர்கள் உதவியின்றி எந் தப் பணியும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள். இவர்கள் திருநகர் காலனியில் உள்ள ஒரு சிறப்பு குழந்தை களுக்கான மய்யத்தில் கல்வி மற்றும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஈரோடு புத்த கத் திருவிழாவுக்கு வந்து ஆண்டு தோறும் புத்தகங்கள் வாங்கும் பழக்கத்தை வைத்து உள்ளனர். இதற்காக பெற் றோர் இவர்களுக்கு வழங்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வைப்பது வழக்கம்.


இந்த நிலையில் கரோனா பாதிப்பு இவர்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண் ணத்தில், தாங்கள் புத்தகம் வாங்க சேமித்த உண்டியல் தொகையை அப்படியே முதல்-அமைச்சர் நிவாரண நிதி திட்டத்தில் வழங்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவல கத்துக்கு பெர்னாஷ் அலி, பாஷிகா நிஷா ஆகியோர் பெற்றோர் காதர் மொய்தீன்-ஷரிபா ஆகியோருடன் வந்த னர்.


சற்றும் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டு வரும் நிலையில் பாஷிகா நிஷாவும், கையில் ஊன்றுகோல்கள் உதவியு டன் தட்டுத்தடுமாறி நடக் கும் பெர்னாஷ் அலியும் ஆட் சியர் முகாம் அலுவலகத்தை பிரமிப்பாக பார்த்தனர். இவர்கள் வந்திருக்கும் தகவல் அறிந்த ஆட்சியர் சி.கதிரவன் தனது அலுவலகத்தை விட்டு வெளியே வந்து மகிழ்ச்சியு டன் அவர்களை வரவேற்று சிறிது நேரம் அவர்களுடன் பேசினார். பின்னர் 2 பேரும் தங்கள் சேமிப்பு உண்டியல் களை அப்படியே ஆட்சியர் சி.கதிரவனிடம் ஒப்படைத்தனர்.


நெகிழ்ச்சியான இந்த நிகழ்வின்போது செல்வா சேரிடபிள் அறக்கட்டளை நிறுவனர் ஜெ.ஜெ.பாரதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 2 பேரும் வழங்கிய உண்டியல் திறக்கப்பட்டு எண்ணியபோது அதில் ரூ.4 ஆயிரத்து 392 இருந்தது. அந்த பணத்தை முதல்-அமைச்சர் கரோனா நிவா ரண நிதிக்கு அனுப்ப ஆட் சியர் உத்தரவிட்டார்.


No comments:

Post a Comment