"ஒப்பற்ற தலைமை" இரண்டு பகுதிகளாக சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு காணொலியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா உரையைக் கேட்டேன். 40 ஆண்டுக்கு முன் அய்யனார்குளம், உசிலம்பட்டி அருகில் மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் ம.பொ.முத்து கருப்பையா, செயலாளர் ச.இரகுநாகநாதன் அய்யனார்குளம் கிளை கழகத்தை தொடங்கி வைத்தார்கள். அப்பொழுது கிராம பெரிய வர்கள் பெண்களை தூண்டி விட்டு கல், மண், மாட்டு சாணம் போன்றவைகளை சன்னல் வழியாக எரிந்தார் கள். தோழர்கள் மற்றும் அய்யா முத்து கருப்பையா, இரகுநாகநாதன் சட்டை வேட்டியில் பட்டது.
நானும் மற்ற தோழர்களும் அந்த பெண்களை அப்புறப்படுத்தி விட்டோம். அய்யா அவர்களை பாது காப்புடன் மாட்டு வண்டியில் வழி அனுப்பி வைத் தோம். அதன்பின்பு புலவர் கண்மணி கூட்டம் ஒரு வாரத்தில் ஏற்பாடு செய்தோம். கழக பிரச்சாரம் நடை பெற வசூல் செய்து தான் கூட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர் கூறினார்கள். எங்களுக்கு பயிற்சியும் கொடுத்தார்கள். அதன் அடிப்படையில் பொது மக்களிடம் அப்பொழுது பணமாக வசூல் செய்ய முடியாது நெல், பருத்தி, தானியமாக வசூல் செய்து அதை கடையில் போட்டு பணமாக சேர்த்து கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கற்களை விட்டு எரிந்ததில் புலவர் கண்மணி, அய்ந்து தோழர்களுக்கு காயம் மற்றும் காவல்துறைக்கு காயம் ஏற்பட்டது. காவல்துறை வழக்கு பதிவு செய்தார்கள். அந்த எதிர்ப்பு தான் அய்யனார்குளம், உசிலம்பட்டி பகுதிகளில் கழகம் வளர்ந்ததற்கு காரணமாக அமைந்தது.
தொடர்ந்து கூட்டங்கள்... அடுத்து தாங்கள் எங்கள் கிராமம் அய்யனார் குளம் கூட்டத்திற்கு வந்தீர்கள். சாணி, கல் எறிவதற்கு பதிலாக சின்ன குழந்தைகளை ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து நெற்றியில் பட்டையை அடித்து கூட்டத்தில் உட்கார வைத்தார்கள். அதன் விளைவாக தொடர்ந்து அந்த பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது.
தொடர்ந்து பல்வேறு கழக மாநாடுகள், போராட்டத் தில் கைது, அய்யா அவர்களின் உரை, பயிற்சி வகுப்பு கள் தொடர்ந்து பல்வேறு கழக கூட்டங்களால் பக்குவப் பட்டோம்.
அதுபோல் சமூகநீதி இடஒதுக்கீடு விவரத்தை தெரிந்து இருந்தாலும் சட்டக் கல்லூரி மாணவர்கள் காணொலி கூட்டத்தில் இடஒதுக்கீடு சட்டம் சம்பந்த மாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் நமது கழகம் வழக்கு மூலம்நீதி பெற்றது. தற்போது கிடைத்துள்ள தீர்ப்பு தமிழகம் மட்டும் அல்ல, அதனால் இந்திய அளவில் கழகத்தின் வெற்றியால் பயன் பெற்றார்கள் என்பதை இந்த காணொலி கூட்டம் மூலம் தெரிந்து கொண்டேன். அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.
- மா.பவுன்ராசா, உசிலம்பட்டி
- - - - -
ஆசிரியரின் ஒப்பற்ற தலைமை பண்பு
கடந்த 20.6.2020 சனியன்று காணொலி வாயிலாக பல்கலைக் கழகத்தின் மாலை நேர வகுப்பு போன்று அரியதொரு நிகழ்வினை நடத்தினார்கள். பனகால் அரசரின் 1928இல் மறைவு "இரங்கல் இலக்கிய"மாக அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் 7 பக்க இரங்கலுரையின் முதல் பகுதியை மிக விளக்கமாக அழகாக எடுத்துரைத்தமைக்கு மட்டிலா மகிழ்ச்சி. வரலாற்றுச் சான்றாய் அமைந்தது.
அண்மையில் மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு பற்றி தமிழக உணர்வுமிக்க அரசியல் இயக்கங்கள் டில்லி உச்சநீதிமன்றத்தை நாடியபோது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மிகத் தெளிவான தொலைநோக்கோடு டில்லிக்குச் சென்று பார்ப்பனக் குடுமிகளால் அலைக்கழிக்கப்படுவார்கள் எனக் கருதி முதலிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய தன்மையே இன்றைய உலகில் "ஒப்பற்ற தலைமை" பண்பு நிறைந்த தலைமகனாக ஆசிரியர் அவர்கள் விளங்குகின்றார் என எண்ணி எழுச்சியும் மகிழ்ச்சியும் கொள்கின் றோம். அவரின் தொண்டறம் வாழ்க.
- அ.இரா.முல்லைக்கோ, செயலாளர், பெங்களூரு
- - - - -
விடுதலை நாளேட்டில் (18.6.2020) நான் படித்த தலையங்கம் 'மொழி மாற்றம்', 'ஒற்றைப் பத்தி' -யில் 'கரோனா கடவுளே நமஹா', ஆசிரியரின் 'முதுமை: இன்பத் திளைப்பா ? துன்பத் துளைப்பா?' போன்றவை மிகவும் பயனுள்ளதாகவும், சிந்தனையைத் தூண்டும் வகையில் இருந்தன.
- கோ. ஆறுமுகசாமி, சென்னை
No comments:
Post a Comment