- உங்களைப் பிரிப்பது எதுவோ அதை அலட்சியப் படுத்துங்கள். இணைப்பது எதுவோ அதைப் பலப்படுத்துங்கள்.
- வாழ்க்கைத் தேரின் அச்சாணி நம்பிக்கையே! வாழ்க்கைத் தேரின் வழித்தடம் தொண்டறமே.
- காசற்ற மனிதனாக இருப்பது கூடாதுதான். அதனை உழைத்துப் பெற வேண்டியது அவசியம். ஆனால் அதைவிட மாசற்ற மனத்தினனாகி, மனிதனாக வாழ்வது அவசியம்.
- உறவு பலப்பட ஒத்தவை காண்க
மறக்கவே பேதம் மகிழ்வு.
- வாழ்க்கையாந் தேரின் வழித்தடம் தொண்டறம்
ஆழ்ந்தவோர் நம்பிக்கை அச்சு.
- காசேயில் லாமலுங் கையிருக்க லாம்மனம்
மாசின் றிருத்தலே மாண்பு.
- ஆக்கம்: சுப.முருகானந்தம், மதுரை
No comments:
Post a Comment