டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:
- கேரளா மலப்புரத்தில் யானை கொல்லப்பட்டது குறித்து பா.ஜ.க. எம்.பி. மேனகா காந்தி தெரிவித்த கருத்து மத ரீதியான பகைமையை உருவாக்குகிறது என்ற அடிப்படையில் மலப்புரம் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
- அமெரிக்காவில் கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட் காவல்துறை அதிகாரியால் கழுத்தில் முழங்காலில் 8.46 நிமிடங்கள் அழுத்திக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், கலவரம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. நேற்று மின்னிபோலீஸ் நகரில் ஜார்ஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதத்தில் 8.46 நிமிடங்கள் மக்கள் அமைதி காத்து இரங்கல் தெரிவித்தனர். அதில் பேசிய மனித உரிமை தலைவர் ஷார்ப்டன், உங்கள் முழங்கால்களை கழுத்தில் இருந்து எடுங்கள் என்ற முழக்கத்துடன் பேச்சைத் துவக்கியது அனைவரையும் ஈர்த்தது.
- கருப்பர்கள் வாழ்வும் முக்கியம் என்ற அடையாள அட்டையுடன் அமெரிக்காவில் மக்கள் போராடி வரும் நிலையில், இந்தியாவில் முஸ்லீம்கள் வாழ்வும் முக்கியம் என்று போராட வேண்டியுள்ளது; ஆனால் அப்படிச் சொல்பவர்கள், ஒரு விலையைக் கொடுக்கவும் வேண்டியுள்ளது என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
- கேரளாவில் யானை கொல்லப்பட்டதைத் தொடர்ந்து திட்ட மிட்ட முறையில் மதரீதியிலான கருத்தைப் பரப்பிடும் செயல்பாடு களையும் தலையங்கச் செய்தி எடுத்துக் காட்டுகிறது.
டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 75 சதவீதத்தினர் இன்னமும் வேலை எதுவுமின்றி சொந்த ஊருக்குச் செல்ல வழியின்றி இருப்பதாக ஸ்வான் என்ற அமைப்பின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆத்ம நிர்மான் என்ற திட்டத்தைத் தவிர வேறு எந்த திட்டமும் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. பொருளாதாரப் பின்னடைவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியே இதற்குக் காரணம்.
டைம்ஸ் ஆப் இந்தியா, டில்லி பதிப்பு:
- வரும் நவம்பரில் பீகார் தேர்தல் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது.
நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பு:
- கரோனா தொற்று காரணமாக, மார்ச் 20 முதல் மூடப்பட்டிருக்கும் பூரி ஜகன்னாதர் கோயில், ஜூலை 5-ஆம் தேதி வரை தொடர்ந்து மூடியே இருக்கும் எனக் கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
தி இந்து, சென்னை பதிப்பு:
- தனியார் மருத்துவமனைகள் அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான கட்டணத்தில் கரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியுமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
- மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பத்திரிக் கையாளர்களை வல்லூறு எனக் கூறியதற்கு, ’சட்ட ஆலோசகரின் இக்கட்டான நிலைக்கு அப்பால்’ என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர் ஹரீஸ் கர்கே கட்டுரை எழுதி உள்ளார்.
- மத்திய அரசின் விவசாயக் கொள்கை, கூட்டாட்சி அமைப்பை குறைத்து மதிப்பிடுவதாகும் என பஞ்சாப் முதல்வர் அமீர்ந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
எகனாமிக் டைம்ஸ், மும்பை பதிப்பு:
- அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான வரைப்படத்தை பல கட்டட வல்லுனர்கள் டிரஸ்டிகளிடம் அடுத்த வாரம் காண்பிக்க உள்ளனர்.
- குடந்தை கருணா,
6.6.2020
No comments:
Post a Comment