ஒற்றைப் பத்தி - ‘‘பேதம்!'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 4, 2020

ஒற்றைப் பத்தி - ‘‘பேதம்!''

நாம் எவ்வளவு உயர்ந் திருக்கிறோம் - வளர்ந்தி ருக்கிறோம் - உரிமை பெற்று உன்னத நடை போடுகிறோம் என்பதை எப்படி அளவிடுவது?


குறிப்பாக பார்ப்பனர் அல்லாதார் நிலை மேம் பட்டு மிளிர்வதன் பின்ன ணியில் இருந்த வரலாறு என்ன?


இதெல்லாம் தெரியாத காரணத்தால் அல்லது அறிந்துகொள்ளும் வாய்ப்பும், ஆர்வமும் இல்லாததால், ஏதோ வானத்திலிருந்து குதித்தது போல ஜம்பம் பேசுவோர் களை நாம் காண முடி கிறது.


அத்தகையவர்களும் அறிந்துகொள்ள ஆயிரம் ஆயிரம் தகவல்கள் உண்டு.


இன்றைக்கு 90 ஆண் டுகளுக்குமுன் நாட்டின் நிலை என்ன? இதோ ஓர் எடுத்துக்காட்டு:


1926 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் வேங் கைக் குறிச்சி என்னும் ஊர் - ஆங்கோர் தொடக் கப் பள்ளி தாழ்த்தப்பட்ட வர் களுக்கான லேபர் துறையால் நடத்தப்பட்ட ஒன்றாகும்.


இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றினார்கள். தலைமை ஆசிரியர் நான் காம் வகுப்பு மட்டுமே தேறிய ஓர் உயர்ஜாதிக் காரர். இவருக்கு மாதச் சம்பளம் ரூபாய் 22. இவ ரின் கீழ் வேலை செய்யும் இன்னொரு ஆசிரியர் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந் தவர் என்று கருதப்படுப வர். இவரின் படிப்பு பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.). ஆனால், மாதச் சம்பளமோ ரூபாய் 15 மட்டுமே!


இந்த ஆசிரியர் பள்ளி யில் நாற்காலியில் அமரக் கூடாது. கீழே உட்கார்ந்து தான் பாடம் நடத்தவேண் டும்.


குறைந்த படிப்புள்ள வர் தலைமை ஆசிரியர். அதிக சம்பளம். காரணம், அவர் உயர்ஜாதியாம். அதிகப் படிப்புப் படித்த வர் அவருக்கும் கீழ் வேலை செய்யவேண்டும் - குறைந்த சம்பளம் மட் டுமல்ல, நாற்காலியிலும் அமரக்கூடாதாம் - கார ணம், கீழ்ஜாதிக்காரர்.


இந்த அர்த்தமுள்ள(?) ஹிந்து சமூகத்தின் யோக் கியதை இதுதான். இது குறித்து ‘குடிஅரசு' (6.6.1926) கண்டித்து எழுது கிறது.


அந்த நிலையையும், இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.


ஏற்பட்டுள்ள வளர்ச் சிக்கு - முன்னேற்றத்திற்குப் பின்புலமாக - பலமாக இருந்த இயக்கம் எது? தலைவர்கள் யார்? என் பது விளங்கும்.


 - மயிலாடன்


No comments:

Post a Comment