பாஜக சாமியார் ஆளும்  உத்தரப்பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை தாமதத்தால் குழந்தை இறந்த அவலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 30, 2020

பாஜக சாமியார் ஆளும்  உத்தரப்பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை தாமதத்தால் குழந்தை இறந்த அவலம்

லக்னோ, ஜூன் 30- சாமியார் ஆதித்யநாத் தலைமையி லான பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநில அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டு, தாம தமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளது.


கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை யில் இளம் தம்பதியினர் இறந்த தங்களது ஒரு வயதுக் குழந்தையை அணைத்தபடி கதறிய காட்சிப் பலரது நெஞ்சையும் பதறச் செய்தது, இந் தக் காட்சி சமூகவலைத்தளங் களில் வைரலாகி வருகிறது.


குழந்தைக்கு காய்ச்சல் மற் றும் கழுத்து வீக்கம் ஏற்பட அரசு மருத்துவமனைகு அரக்கப்பறக்க குழந்தையை எடுத்து வந்தனர் தம்பதியினர். ஆனால் குழந்தையை தொட மறுத்த மருத்துவர்கள் கான் பூருக்கு எடுத்துச் செல்லுமாறு கூறினர், அங்கிருந்து கான்பூர் 90கிமீ தூரம்.


ஆனால் இதனை மருத்து வர்கள் மறுத்தனர். மாலை 4.45 மணியளவில் இந்தத் தம் பதியினரின் அல்லாட்டத்தை யும், இறந்த குழந்தையை அணைத்தபடி தாயும் தந்தை யும் கதறிய காட்சி பார்ப்ப வர்கள் நெஞ்சை உருக்கியது, இதனை வீடியோ பிடித்தனர் பலர்.


தம்பதியின் பெயர் ஆஷா தேவி, பிரேம்சந்த், 1 வயது குழந்தையின் பெயர் அனுஜ். இருவரும் சிகிச்சை மறுக்கப் பட்டதால் இறந்த குழந் தையை அணைத்தபடி கதறிய காட்சி சமூகவலைத்தளங் களில் வைரலானது. இன் னொரு வீடியோ படத்தில் குழந்தைக்கு எமர்ஜென்சி வார்டில் சிகிச்சை அளிக்கப் பட்டது போல் பதிவானது.


இது தொடர்பாக பெற் றோர் கூறும்போது, “பலரும் செல்பேசியில் படம் பிடித்த தையடுத்து உடனே அனும தித்தனர். அதற்கு முன்பாக என் குழந்தையைத் தொட் டுக்கூட பார்க்கவில்லை. 30 நிமிடங்கள் அல்லாடினோம். தொடர்ந்து கான்பூருக்குக் கொண்டு செல்லுங்கள் என்றே கூறினர். நான் ஏழை, என்னிடம் பணம் இல்லை.” என்று பிரேம் சந்த் தனியார் தொலைக்காட்சியில் கூறினார்.


“குழந்தையின் கழுத்து வீங்கியது, எங்களை 30-, 40 நிமிடங்கள் அலைக்கழித்த னர் பிறகு பலரும் செல்பேசி யில் படம் எடுக்க பயந்து போய் அட்மிட் செய்தனர். ஆனால் தாமதம் செய்ததால் குழந்தை இறந்தது” என்கிறார் தாயார் ஆஷா தேவி.


ஆனால் அலட்சியம் இல்லை என்று மருத்துவ மனை நிர்வாகமும் கன் னோஜ் மாவட்ட நிர்வாகமும் மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment