டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- கரோனா தொற்று, பொருளாதாரப் பின்னடைவு, தற்போது நிறவெறிக்கு எதிரான மக்கள் போராட்டம் ஆகிய பிரச்சினைகள், அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் முக்கிய பிரச்சினையாக எதிரொலிக்கும்.
- கரோனா தொற்று முழு அடைப்பு தளர்வு காரணமாக தற்போது வெகுவேகமாக அதிகரித்துவரும் சூழலில், மத்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
- பீகாரில் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள மாநிலத் தேர்தலையொட்டி, பாஜக தலைவர் அமித் ஷா காணொலி மூலம் தேர்தல் பரப்புரையை துவக்கினார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:
- புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் தங்கள் ஊருக்கு திரும்பியுள்ள நிலையில், மத்திய அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை விரிவுபடுத்தி, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிட வேண்டும். இதில் அரசியல் கூடாது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
எகனாமிக் டைம்ஸ், மும்பை பதிப்பு:
- ஜவுளி, பனியன் ஆடை உற்பத்தி நகரங்களான லூதியானா முதல் திருப்பூர் வரை, வெளி மாநிலத் தொழிலாளர்கள் கரோனா காரணமாக தங்கள் ஊர்களுக்குச் சென்றதையடுத்து, தையல் உள்ளிட்ட தொழில்களில் ஆட் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. அவர்களைத் திரும்ப அழைப்பதற்கு சில மாநிலங் களோடு தொடர்பில் இருப்பதாகவும், அதிக ஊதியம் தரவும் சம்மதிப்பதாகவும், தொழில் அதிபர்கள் தற்போது தெரிவித்து உள்ளனர்.
தி இந்து, டில்லி பதிப்பு
- மத்தியில் மோடி அரசு, கரோனா தடுப்புப் பணியில் தடுமாறும் நிலையில், மேற்கத்திய நாடுகளைப் போல், காங்கிரஸ் கட்சி, கரோனா மற்றும் பொருளாதாரப் பின்னடைவில், மாற்று யோசனைகளை மக்கள் முன் வைத்திருக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா கருத்து தெரிவித்துள்ளார்.
- குடந்தை கருணா,
7.6.2020
No comments:
Post a Comment