"விடுதலை"யின் வெற்றி!
மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் நேர்முகப் பேட்டியை நீக்கிவிட்டு, நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்படும் என்ற யோசனையை எதிர்த்து 1.04.1977, 2.04.1977 ஆகிய இரு நாட்களிலும் "விடுதலை" போர்க் குரல் கொடுத்தது. அதன் விளைவாக இந்த யோசனை கைவிடப்பட்டதாக தமிழக அரசு சார்பில் (14.04.1977) அறிவிக்கப்பட்டது.
***
சட்டமன்றத்தில் 'விடுதலை'
பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி "விடுதலை" எழுதிய தலையங்கத்தை சட்டமன்றத்தில் உழைப்பாளர் முன்னேற்றக் கட்சி உறுப்பினர் மார்க்கபந்து படித்துக் காட்டி வலியுறுத்தினார். (6.08.1977).
***
விக்டோரியா 820
கிழக்கு ஜெர்மனியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்ட "விக்டோரியா 820" என்ற புதிய அச்சு இயந்திரத்தில் "விடுதலை" 4.11.1969 முதல் அச்சிடப்பட்டு வெளிவரத் துவங்கியது தமிழகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு என்.வி. நடராசன் தலைமையில், தந்தை பெரியார் முன்னிலையில், தமிழக முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் இயக்கி வைத்தார்.
***
நாடாளுமன்றத்தில்...
"இந்தியன் பாங்க்கா - அக்கிரகாரமா?" என்பதுபற்றி "விடுதலை"யில் 'சர்ச்லைட்' எழுதிவந்த பார்ப்பனர் ஆதிக்கத் தைப் பற்றிய கட்டுரைபற்றி திமுக உறுப்பினர் திரு. கிருட் டிணன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். (12.05.1970).
***
"விடுதலை" எழுத்தின் பலம்
இந்தியன் வங்கியின் செயல்பாடுகளைக் கண்காணிக்க தனி அதிகாரியை ரிசர்வ் வங்கி நியமனம் செய்தது. "விடுதலை" எழுத்தின் பலம் இதன்மூலம் நிரூபணம் ஆகிறது!
'விடுதலை' வைர விழா - தந்தை பெரியார் 117ஆவது ஆண்டு பிறந்த நாள் மலர் 1995
No comments:
Post a Comment