'ஒப்பற்ற தலைமை' எனும் தலைப்பின்கீழ் காணொலி மூலம் நடைபெற்ற இரண்டாவது தொடர் சொற்பொழிவின் தொடக்கவுரையைத் திராவிடர் கழகத்தின் செயலவைத் தலை வர் சு.அறிவுக்கரசு சுருக்கமாக ஆற்றிய அதே நேரத்தில் பல்வேறு தகவல்களையும், தரவுகளையும் கூறினார்.
தந்தை பெரியார் எப்பொழு துமே கட்சிக்காரராக இருந்த தில்லை; மாறாகக் கொள்கைக் காராகவே இருந்து வந்திருக் கிறார். நீதிக்கட்சி ஆட்சியிலே பனகல் அரசர் பிரதமராக சென்னை மாநிலத்தில் இருந்த போது கொண்டு வரப்பட்ட இந்து அறநிலையத்துறை சட் டத்தைக் காங்கிரசில் இருந்த போதே தந்தை பெரியார் ஆத ரித்ததைச் சுட்டிக் காட்டினார்.
நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் சட்டமன்றம் எப்படி ஜனநாயகப் பூர்வமாக அமைந்தது என்ப தற்கு - இந்துஅறநிலையத்துறை மசோதாமீது 80 நாட்கள் விவா தம் நடந்ததை எடுத்துக் கூறி - இப்பொழுதெல்லாம் விவாதங் களுக்கு இடமின்றி அவசரச் சட்டங்களாகப் பிறப்பிக்கப் படும் அவலத்தையும் அவர் உரையில் சுட்டிக்காட்டினார்.
திராவிடர் கழகம் என்பது ஓர் எதிர்ப்புணர்வு ஸ்தாபனம் என்று தந்தை பெரியார் தெரி வித்த கருத்தைக் கூறிய செய லவைத் தலைவர்- ஜாதி, மதம், கடவுள், அரசியல் உள்ளிட்ட வற்றை தந்தைபெரியார் தொடர்ந்து எப்படியெல்லாம் எதிர்த்தார், திராவிடர் கழகம் எப்படியெல்லாம் எதிர்ப்புப் பணிகளை நடத்தி வந்தது என்பதை விளக்கினார்.
தந்தை பெரியாரால் தாக்கப் படாத ஒன்று உண்டா என்ற கேள்வியையும் எழுப்பினார். எந்த இடத்திலும் தந்தை பெரியார் வழி நடத்தும் தலைவ ராக இருந்திருக்கிறாரே தவிர, மற்றவர்களைப் பின்பற்றித் தொடரும் நிலையில் இருந்த தில்லை என்று கூறி பிறப்பினிலே பெரியாராய்த்தான் பிறந்தார் என்று தந்தை பெரியார் பற்றி புரட்சிக் கவிஞர் பாடியதையும் அருமையாக விளக்கினார்.
ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி
அவள் அணிந்திராத அணியாவார்
அறிந்திராத அறிவாவார்
என்று தந்தை பெரியார் குறித்த புரட்சிக் கவிஞர் பாட லையும் கூறி, காணொலி கருத் தரங்கத்தைத் தொடங்கி வைத்தார்.
No comments:
Post a Comment