‘விடுதலை’யைப் படிக்காவிட்டால்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 3, 2020

‘விடுதலை’யைப் படிக்காவிட்டால்...

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், அருமை இளவல், மானமிகு கி.வீரமணி அவர்களின் 77ஆம் ஆண்டு பிறந்த நாளினை யொட்டி என்னுடைய மனமார்ந்த வாழ்த்து களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் சென்னையில் இருந்தால் இரண்டு நாட்களுக் கொருமுறை என்னைச் சந்திக்கத் தவற மாட்டார். ஆனால் கடந்த பத்து நாட்களாக அவர் வெளிநாடு சென்றிருப்பதால், நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அவர் எங்கிருந்தாலும், நாட்டில் நடைபெறும் எந்தச் சம்பவம் குறித்தும் அவர் கருத்து “விடுதலை” யில் இடம்பெறத் தவறாது. அன்றாடம் அதைப் படிக்காவிட்டால் எனக்கும் ஏடுகளைப் படித்த நிறைவு ஏற்படாது. தந்தை பெரியார் அவர்களின் எண்ணங்களை நாளும் பரப்பிடும் தூதுவராக - திராவிடர் கழகத்தின் தலைவராக - சுயமரியாதைச் சுடரொளியாகப் பணியாற்றும் என் இளவலை இதய மகிழ்ச்சியோடு வாழ்த்துகின்றேன்.


(தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின்


77 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி முதல் அமைச்சர்


கலைஞர் அவர்களின் வாழ்த்து 2.12.2009)


No comments:

Post a Comment