சாத்தான்குளம் கொலை வழக்கு: முறையாக விசாரிக்காவிட்டால் சி.பி.அய் விசாரணை கோருவோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 28, 2020

சாத்தான்குளம் கொலை வழக்கு: முறையாக விசாரிக்காவிட்டால் சி.பி.அய் விசாரணை கோருவோம்

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்



சென்னை,ஜூன்28, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு:


"சாத்தான்குளத் தில் கொலை செய்யப் பட்ட இருவரது உடற்கூராய்வு (போஸ்ட் மார்ட்டம்) அறிக்கை வராத நிலையில் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலில் இறந்தார் என்றும், அவரது தந்தை ஜெயராஜ் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதன் அடிப்படையில் சொன்னார்?


தவறு அரசின் பக்கம் என்றுதானே அ.தி.மு.க சார்பில் ரூ.25 லட்சம் கொடுத்தீர்கள்? இயற் கையான மரணம் என்றால் கொடுத்திருப் பீர்களா? காவல் நிலையத்தை சாத்தான் வேட்டைக்காடாக மாற்றியவர்களை கொலை வழக்கில் கைது செய்திடுக! ஜெயராஜ், பென் னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நட வடிக்கை எடுக்கவில்லை என்றால் சி.பி.அய் விசாரணை கேட்டு தி.மு.க வழக்குத் தாக்கல் செய்யும்!"


இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment