பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 1, 2020

பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை

தமிழக அரசு அதிரடி உத்தரவு


சென்னை,ஜூன்1, தமிழகத்தில் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதற் கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தலைமை செய லாளர் கே.சண்முகம் வெளியிட்ட அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகின்றன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்து கிடையாது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக சுகவீன மானவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் ஆகியோர் மருத்துவக் காரணங்கள் மற்றும் அவசர தேவை களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரலாம். ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தி தொற்றுக்கு விலகிக் கொள்ள வேண்டும். பணியிடங்களில் இந்த செயலியை அனைத்து ஊழியர்களும் பதிவிறக்கம் செய்து கொண்டு பாதுகாப்பாக இருக்கலாம். பொது இடங்களில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை விதிக்கப் படும். பொது இடங்களில் மது அருந்துவது, பான், குட்கா, புகையிலை ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இல்லாமல் ஆட்களை அழைத்து செல்லும் நிகழ்வுகளில், குடியிருப்பு நலச்சங்கங்கள், கட்டுமான சங்கங்கள் போன்றவை கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அரசாணையில் மேற் கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி விளையாட்டு வளாகங்கள், அரங்கங்களை பார்வையாளர்கள் இல்லாமல் திறக்க அனுமதிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment