‘‘ஆரியர்கள் ஆதியில் தமிழ் எனும் மொழியை உச் சரிக்கக் கூடாதவர்களாக இருந் தார்கள். தமிழ் எனும் மொழி யிலுள்ள ‘ழ'கரம் தமிழ்ப் பாஷையொன்றிற்கே உரிய சிறப்பெழுத்தாய் இருப்பதி னாலும், ஆரியர்கள் பெரும் பாலும் மெய்யெழுத்துக்களை மொழிக்கு முதலாகக் கொண்டு உச்சரிப்பவர்கள் ஆதலாலும், இந்தத் தமிழ் எனும் மொழியை த்மிள், த்மிளம் என்று வழங்கினதாகவும், அது தானே திரிந்து திரமிளம், திராவிடம் என்றாயிற்று என்பார் சிலர்.
ஆயின் இந்தத் தமிழ்ப் பாஷை எந்நிலத்தில் தோன் றிற்றோ, எந்நிலத்தில் நிறைந்து வழங்கப்படுகிறதோ அந்நிலந் தானே ஆதிதிராவிடம் எனற் காகும்.
இந்தத் தமிழ்ப் பாஷை யாண்டுத் தோற்றமாயிற்றென விசாரிப்புழி; சிலர் இப்பாஷை வட இந்திய பாஷையாகிய ஆரிய பாஷையாம் சமஸ்கிரு தத்தின் கிளைப் பாஷை என்றியம்புவர். ஆனால், தமிழ்ப் பாஷையானது நல் இலக்கணத்தோடு, அப் பாஷைக்குரிய மக்களது புரா தனம், இடம் முதலியவற்றை நோக்குமளவில், அது ஒரு கிளைப் பாஷையென்று சொல் வதற்கு நியாயமில்லை. ஆகை யாற்றானே ஆரியந் தமிழெ னும் பாஷையைத் தேர்ந்த ஆசிரியர்கள், இரு பாஷைக்கு முள்ள பேதங்களை நன்கெடுத் துக் காட்டுகின்றனர். அவற்றுள் சிவஞான சுவாமிகள் கூறுவ தாவது:
தமிழ் மொழியுணர்ச்சிக்கட் படுஞ் செயல்களும், குறியீடு களும், வினைக் குறிப்பு, வினைத் தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர் திணை, அஃறிணை முதலிய செயல் பாகுபாடுகளும், அகம், புறமெனும் பொருட் பாகுபாடு களும், குறிஞ்சி, வெட்சி முத லிய திணைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுளிலக் கணமும், இன்னோரன்ன பிற வும் வடமொழியிற் பெறப்படா என்பதாகும்.
டாக்டர் கால்டுவெல் துரை யவர்கள் தானியற்றியுள்ள திராவிட பாஷா இலக்கண நூலிலே கூறுவதாவது:
(‘‘தான் நினைத்தவாறு) சமஸ்கிருத பாஷையானது தமிழ்ப் பாஷையினின்று 20 வார்த்தைகளைக் கடனாகப் பெற்றிருக்கின்ற''தென்பதாம். அவ்வார்த்தைகளாவன:
அக்கா, அத்தை, அடவி, அம்மா, ஆணி, கடுகு, கலா, குடி, கோட்டை, நீர், பட்டணம் முதலியனவாம்.
ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங் கார் எம்.ஏ., அவர்கள் கூறுவ தாவது:
...This is itself is sufficient to prove that Tamil has no philo logical affinity with either Sanskrit or any Indo European Tongue அதாவது தமிழ்ப் பாஷையானது சமஸ்கிருதம் அல்லது அய்ரோப்பிய பாஷை யினின்று பிறந்ததெனற்காகா என்றவாறு...'' (ஆதாரம்: ஆதி திராவிடர் வரலாறு - திரிசிபுரம் ஆ.பெருமாள்பிள்ளை, அன்பு பொன்னோவியம், கவுதம சன்னா (1922).
- மயிலாடன்
No comments:
Post a Comment