கருணாநிதி பதவியில்
நீடிப்பது அவசியம்!
பெருந்தலைவர் காமராசர்
ஸ்தாபன காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், தி.மு.கழகம் நெருக்கடி நிலையைக் கண்டித்த போதிலும், தி.மு.க, அரசு இது தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதது பற்றி மனக் கசப்புடன் பேசினார்; கலைஞர் இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்தார். அதைக் கேட்டதும் காமராசருக்குக் கோபம் வந்துவிட்டது. “அட சும்மாக் கெடப்பா, ரொம்பத் தெரிஞ்சவன்போலப் பேசுறே! இந்த நேரத்துல எப்படி நடந்துக்கணுமோ அப்படித்தான் கருணாநிதி நடந்துகிட்டாரு. அது ஒம் மூளைக்கு எப்படி எட்டும்னேன். சும்மா வீராப்புக் காட்டினா ஆச்சா... அதுனால என்ன லாபங்கறேன்...
அந்தம்மா டி.எம்.கே. கவர்மெண்டை டிஸ்மிஸ் பண்ணும். இப்ப இங்க மிஞ்சியிருக்கிற சுதந்திரமும் இல்லாமப் போகும். வேற என்ன நடக்கும்னேன்? இந்த நேரத்துக்கு இங்கு கருணாநிதி தொடர்ந்து பதவியிலே நீடிச்சுக்கிட்டு இருக்கறது ரொம்ப அவசியம். அதை மறந்துடாதே. பிரைம் மினிஸ் டரைப் பத்தி ஆரும் எதுவும் பேசக் கூடாதுன்னு உத்தரவு வருது. அங்கங்க இருக்கிற சீஃப் மினிஸ் டரெல்லாம் அந்த உத்தரவுலேயே தன்னைப் பத்தி யும் ஆரும் எதுவும் பேசக் கூடாதுன்னு சேர்த்து க்கறான்.
பார்க்கப் போனா இப்ப கருணாநிதியைப் பத் தித்தான் கண்டவனெல்லாம் கன்னா பின்னான்னு பேசிக்கிட்டிருக்கான். கருணாநிதி நினைச்சா இந்த உத்தரவைப் பயன்படுத்தி அதைத் தடுக்க முடியும். ஆனா அவரு அப்படிச் செய்யலே; அதை மறந்து டாதே. கருணாநிதி விரும்பினா பிரைம் மினிஸ்ட ரோட ஒத்துப்போயி நிம்மதியா இருந்துகிட்டிருக்க முடியும். அதையும் அவரு செய்யலே. இதை யெல்லாம் நினைச்சுப் பார்க்காம ஏதோ வாயிருக் குதுன்னு பேசிட்டா ஆச்சா?’ என்று பொரிந்து தள்ளினார், காமராசர்.
அண்ணாவின் சரியான வாரிசு
பாபு ஜெகஜீவன்ராம்
அண்ணா ஏற்றுக் கொண்ட பொறுப்பு இப் போது திரு. கருணாநிதி யின் இளம் தோள்களில் வந்து விழுந்துள்ளது. கலைஞராக-அறிவார்ந்தவ ராக எழுத்தாளராக- சொல்லாற்றல் படைத்த வராக விளங்கும் திரு.கருணாநிதி - தி.மு. கழகத்தின் தலைவர் பொறுப்பிலும் - தமிழகத்தின் முதல்வர் பொறுப்பிலும் திரு. அண்ணாதுரைக்குத் தான் சரியானவாரிசு என்பதை நிரூபித்து வருகிறார். அவருக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
கருணாநிதி முழுமையான அரசியல்வாதி
மூதறிஞர் இராஜாஜி
இராஜாஜி அவர்கள் என்பால் செலுத்திய அன்பு அலாதியானது. சிறப்பானது. 1964 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது சென்னை ராயப்பேட்டை லெட்சுமிபுரம் யுவர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் இரா ஜாஜி அவர்களும், நானும் தோழர் ஈ.வெ.கி.சம்பத் தும் ஒன்றாகப் பேசினோம். அந்தக் கூட்டத்தில் நான் பேசும்போது “தூக்கணாங் குருவியொன்று தனது கூட்டுக்கு ஒளி கிடைக்கும் - என நினைத்து கொள்ளிக்கட்டை ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்து கூட்டில் வைத்ததாம். அது ஒளி கொடுப் பதற்குப் பதில் கூட்டையே பொசுக்கி விட்டதாம். அதுபோலத் தமிழகம் பயன்பெறும் என்று இந்தியைக் கொண்டு வந்தார் இராஜாஜி. ஆனால் அந்த இந்தியோ தமிழகத்தையே சுட்டுப் பொசுக்க முயல்கிறது” என்று நான் (தலைவர் கலைஞர்) குறிப்பிட்டேன். அந்த உவமையை இராஜாஜி கேட்டுவிட்டு மனந்திறந்து என்னைப் பாராட்டி னார். அந்தக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசிய இராஜாஜி, “கருணாநிதி முழுக்க முழுக்க அரசியல் வாதி, இலக்கியவாதி, பத்திரிகைக்காரர்” என்று பாராட்டினார்.
கருணையும் நிதியும்
வினோபா
நான் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்தபொ ழுது திரு. அண்ணாதுரையைச் சந்தித்தேன். அவருடைய எண்ணம் அனைத்தும் இந்நாட்டின் வளமையைப் பெருக்குவதாகவே இருந்தது.
ஆகவே அண்ணாதுரையின் கருத்துக்கு மாறாக திரு. கருணாநிதி ஒருபொழுதும் நாட்டை நடத்திச் செல்லமாட்டார். ஏனெனில் அவர் பெயரே ”கருணையும் நிதியும்” சேர்ந்தது.
நீங்கள் அவர் சொல்வதை நன்கு கவனியுங்கள், மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று கோருகிறார். அதேநேரம் மதுவிலக்குக் கொள்கையை மத்திய அரசே ஏற்று நாடெங்கிலும் அமல் நடத்தும்படி கோருகிறார்.
மைசூர் மாநிலத்துடன் காவிரி நீர்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தகராறைத் தீர்க்கும்படி மத்திய அரசையே அவர் மத்தியஸ்தம் செய்ய ஏற்பாடு செய்யும்படி கோருகிறார். இந்தக் கோரிக் கைகள் யாவும் மாநில அரசு, மத்திய அரசாங்கத்தைக் கோருவதே. யாவும் மறுக்கப்பட்டால் அவர் எதைத்தான் கோருவது? ஆகவே யான் மத்திய அரசின்பொறுப்பிலிருந்தால் - அவர் கோருவது அனைத்தையும் தயங்காமல் தந்துவிடுவேன். அனைத்தும் நாட்டின் நலனுக்கானவையே!
வென்றது வள்ளுவம்
முன்னாள் பிரதமர் வி.பி. சிங்
இன்று காலையில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று, கலைஞர் கருணாநிதி முதல்வராகப் பதவியேற்றி ருக்கிறார். வள்ளுவர் கோட்டத்துக்கு அடிக்கல் நாட்டி, அந்தக் கோட்டத்தைக் கட்டிமுடித்த கலைஞர் கருணாநிதி அவர்களை அதன் திறப்பு விழாவுக்கு அழைக்காதது மாத்திரமல்ல, அவர் நாட்டிய அடிக்கல்லையும் 13 ஆண்டுகளுக்கு முன்பு தூக்கி எறிந்தார்கள்.
அவ்வாறு கலைஞர் நாட்டிய அடிக்கல்லை அப்புறப்படுத்தியவர்கள், தமிழ் மக்களின் இதயங் களிலே அவர் அடிக்கல் நாட்டியிருக்கிறார் என்ப தையும், அதனை எந்தக் காலத்திலும் எந்தச் சக்தியும் அப்புறப்படுத்த முடியாது என்பதையும் ஏனோ அறியவில்லை .
13 ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதி அவர்கள், அடிக்கல்லை அகற் றியவர்களுக்குச் சரியான பாடம் கற்பித்திருப்ப தோடு, எந்த வள்ளுவர் கோட்டத்தை அவர் உரு வாக்கினாரோ, அந்தக் கோட்டத்துக்குள்ளேயே வந்து பதவிப் பிரமாணம் எடுத்திருக்கிறார். இந்த வெற்றி இந்தியாவுக்கே வழிகாட்டுகிற வெற்றி.”
No comments:
Post a Comment