அந்தோ பொறியாளர் பகுத்தறிவு நெறியாளர் திருச்சி சோம. பொன்னுசாமி மறைந்தாரே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 2, 2020

அந்தோ பொறியாளர் பகுத்தறிவு நெறியாளர் திருச்சி சோம. பொன்னுசாமி மறைந்தாரே!

திருச்சியில் விடுதலை வாசகர் வட்டத்தின் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவரான டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களது அண்ணனுமாகிய  பொறியாளர் சோம. பொன்னுசாமி அவர்கள் 2.6.2020 நண்பகல் 12 மணியளவில் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியை அறிவிக்க மிகவும் வருந்துகிறோம்.


வீட்டிலிருந்து வங்கிக்குச் சென்று திரும்பும் வழியில் இரு சக்கர வாகனத்தில் வந்தவரால் ஏற்பட்ட விபத்து காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இன்று காலமானார்.


அவர் தூத்துக்குடியில் துறைமுக  கழகப் பொறியாளராக நீண்ட காலம் பணியாற்றிய சீரிய பகுத்தறிவாளர்.


இயக்க நிகழ்ச்சிகளுக்கு - திருச்சியில் எல்லாவற் றிற்கும் கருப்புச் சட்டையுடன் கலந்து கொள்ளும் கொள்கை வீரர். சிறந்தபண்பாளர்.


அவரது இழப்பு அக்குடும்பத்திற்கு மட்டுமல்ல; நம் இயக்கத்திற்கும் பெரும் இழப்பு ஆகும்.


அவரை இழந்து வாடும் அவரது வாழ்விணையர் மற்றும் குடும்பத்து உறுப்பினர்கள் - அவரது சகோதரர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


நமது வீர வணக்கம்!


-  கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


2.6.2020


 


குறிப்பு: அமெரிக்காவிலுள்ள அவர் சகோதரர் மருத்துவர் சோம.  இளங்கோவன் - சரோஜா இளங்கோவன் ஆகியோரிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு  இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.திருச்சி கழக முக்கிய பொறுப்பாளர்கள் இறுதி நிகழ் விற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


No comments:

Post a Comment