சமுதாயத்திலே நாம் பெறுகின்ற வெற்றிதான் தி.மு.க.வின் உண்மையான வெற்றி.
பேராசிரியர் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல், வாக்குகளைப் பெறுவது - வெற்றிகளைப் பெறுவது - அமைச்சர்கள் பொறுப்பை ஏற்பது - ஆட்சியிலே அமர்வது இவைகளுக்காக மாத்திரம் தி.மு.கழகம் இல்லை . நான் இன்றைக்குக் கொடுத் துள்ள பிறந்த நாள் செய்தியைப் பார்த்தால் உங்க ளுக்குத் தெரியும். அதில் நம்முடைய சாதனைகளில் எதை முன்னிலைப்படுத்திச் சொல்லியிருக்கிறேன். அனைத்துச் ஜாதி மக்களும் அர்ச்சகராக சட்டம் இயற்றியது; தி.மு.கழக அரசு பெரியாருடைய நெஞ்சில் இருந்த முள்ளை எடுத்தோம். சமுதாயத் துறையில் அது மகத்தான வெற்றியைப் பெற்றதற்கு அடையாளம் என்றுதான் சொல்லியிருக்கிறேன். ஆகவே, சமுதாயத்திலே நாம் பெறுகின்ற வெற்றி தான் தி.மு.கழகத்துக்குத் தேவையான உண்மையான வெற்றி என்பதை மறந்துவிடக்கூடாது.
நான் மாறுபடும் இடம் எது?
நம்முடைய அரசியல் இயக்கங்கள் - தமிழகத் திலே எத்தனை இருந்தாலும் கூட, நாம் அவைக ளிலிருந்து மாறு பட்டிருப்பதற்கு ஒரேயொரு கார ணம், அவர்கள் ஆட்சியை எப்படி நடத்துவது என்பது பற்றி யோசிக்கிறார்கள். நாம் சமுதாயத்தை எப்படி வளர்ப்பது என்பதைப் பற்றி யோசிக்கிறோம். நாம் ஜாதிகளை எப்படி ஒழிப்பது என்று சிந்திக் கிறோம். அவர்கள் ஜாதிகளை எப்படி வளர்ப்பது என்று நினைக்கிறார்கள். இன்னமும் ஜாதிகளின் ஆக்கத்தால், ஆதரவால், கட்சி களை நடத்தி விட முடியுமென்று எண்ணி, கட்சித் தலைமைக்குப் போட்டியிடுகிறவர்கள் எத்தனை பேர் இருக்கி றார்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். நீங்க ளும் அறிவீர்கள். ஆனால், உங்களால் வெளியே சொல்ல முடியாது. சொல்லாததற்குக் காரணம் எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட நிலைமையிலேதான் இன்றைக்கு தமிழ் நாட்டிலே அரசியல் இருக்கிறது. எப்படி உருவான அரசியல் இது? எப்படி உருவான இயக்கம் இது? இந்த இயக்கத்தை தந்தை பெரியார் அவர்கள் துணைநின்று காக்க முற்பட்ட நேரத்திலும் சரி, இந்த இயக்கம் தொடங்கிய போதும் சரி, எத்தகைய எண்ணத்தோடு தொடங்கப்பட்டது என்பதை தயவு செய்து எண்ணிப் பாருங்கள். பழைய ஏடுகளை எடுத்துப் படித்துப் பாருங்கள். பழைய புத்தகங்களை வாங்கிப் படித்துப் பாருங்கள். பழங்காலத்து நண்பர்கள் சில பேர் இன்னமும் உயிரோடு இருப்பார்கள். அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். இந்த இயக்கம் சமுதாயத்திலே நமக்கு ஏற்பட்ட இழிவுகளைத் துடைத்துக் கொள்ள - ஏற்றம் பெற - நாமும் மனிதர்கள்தான் என்கிற சுயமரியாதை உணர்வு கொள்ள - பக்தி என்ற பெயரால் - பஞ்சாங்கம் என்ற பெயரால் - மூட நம்பிக்கை என்கின்ற பெயரால் - ஆண்டவன், ஆலயம் என்கின்ற பெய ரால் - குருட்டு நம்பிக்கை என்கிற பெயரால் - இந்தச் சமுதாயத்திற்கு எந்தக் காலத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டு விடக் கூடாது என்பதைத் தடுத்து நிறுத்துவதற்காகத் தான் இந்த ஆட்சி அமைந்த காலத்திலிருந்து இதுவரையில் எத்தனையோ எதிர்ப்புகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அத்தனையை யும் பொருட்படுத்தாமல், அனைத்து எதிர்ப்புகளுக் கும் ஈடுகொடுத்து - பெண்களுக்காகப் பாடுபடுகின்ற நேரத்திலும் சரி - மகளிர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த நேரத்திலும் சரி - அல்லது மூட நம்பிக் கைகளை வீழ்த்த வேண்டுமென்பதற்காக பேசுகிற நேரத்திலும் சரி - எழுதுகிற நேரத்திலும் சரி - அவை களைக் கலைக் காட்சி களாகத் தெரிவிக்கின்ற நேரத் திலும் சரி - எல்லா நேரத்திலும் கொள்கையை விட்டு நாம் அகன்றதில்லை. இம்மியும் நழுவியதில்லை.
நமக்கு இருக்கின்ற ஒரே பெருமை - ஒரே செல் வாக்கு - ஒரே திறமை - ஒரே சக்தி அதுதான். அதை விட்டு நாம் விலகாத வரை நம்மை யாரும் வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கையை நான் பெறுகிறேன். இன்றைக்கு இந்த நாற்காலி இருக்கலாம் - கோட்டையிலே நமக்காகப் போடப்படுகின்ற சிம்மாசனம் ஓராண்டு காலம், இரண்டாண்டு காலம் இருக்கலாம். எப்போதும் நிரந்தரமல்ல. அவைகளுக்காகவே இந்த இயக்கம் தொடங்கப்பட்டதல்ல. இந்த இயக்கத்திலே இருக்கின்ற நாம் சுயமரியாதை உணர்வோடு வாழ வேண்டும்.
நாம் எதிர்பார்க்கின்ற தேர்தல் சிம்மாசனத்திலே அமர்வதல்ல. கோட்டையிலே உட்காருவதல்ல. இவைகளை எல்லாம் விடப் பெரியது. சமுதாயத்தை எழுச்சியுள்ளதாக ஆக்குவது, சுயமரியாதை உள்ள தாக ஆக்குவது, தமிழன் தமிழனாக வாழ்கிறான் என்ற நிலையை அவனிக்கு எடுத்துக் காட்டுவதுதான் நாம் வெற்றி பெறவேண்டிய. சாதிக்க வேண்டிய தேர்தல் என்பதை மறந்து விடாமல் நீங்கள் பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
- (தி.மு.க. பொதுக்குழுவில் திமுக தலைவர் கலைஞர்- 2.6.2008- சென்னை)
No comments:
Post a Comment