சென்னை, ஜூன் 6- விவசாய தொழில் மேம்பாட் டிற்கான வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான சோனாலிகா கடுமையான சவால்களை எதிர் கொள்ளும் சூழ்நிலை இருந்தாலும், 2020-ஆம் ஆண்டு மே மாதத்தில் 9177 டிராக்டர்கள் என்ற ஒட்டுமொத்த விற்பனை இலக்கை எட்டியுள்ளது மகிழ்ச்சி தருகிறது.
எங்களது கனரக டிராக்டர்களைக் கொண்டு, பல்வேறு மாநிலங்களில் கிருமிநாசினித் தெளிப்புப் பணியில் ஈடுபட்டோம். மருத்துவ மனையுடன் இணைந்த தனிப்பிரிவாக, கரோனா கிருமி பாதிப்பு உள்ளவர்களுக்கு தனிமைப் படுத்தும் அறைகளை அமைத்து தந்தோம். அதிநவீன வென்டிலேட்டரை உருவாக்கி அறிமுகம் செய்தோம். கரோனா ஊரடங்கால் மூடப்பட்ட உற்பத்தியாலைகளில், மீண்டும் செயல்பாட்டைத் தொடங்கிய முதல் டிராக்டர் தொழிற்சாலை எமது சோனாலிகாதான் என இக்குழுமத்தின் செயல்பாடு குறித்து அதன் செயல் இயக்குநர் ரமன் மிட்டல், தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment