இந்திய அரசில் அதிகாரியாகப் பணியாற்றிய பெர்சிவல் ஸ்பீயர் என்பவர், 1981-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள தமது இந்திய நினைவுகள்' என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்:
(1940 ஜூன் மாதம்) பிரான்ஸ் வீழ்ந்தபொழுது தென்னாட்டில் சில தந்திரக்காரப் பார்ப்பனர்கள் ஜெர்மானியர்கள் விரைவில் இந்தியாவைப் பிடித்துவிடவிருப்பதால் அதற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக (வேறு எதற்கு? ஜெர்மானியருடைய கைக்கூலிகளாக, கங்காணிகளாக இருக்கத்தான்) ஜெர்மன் மொழியைக் கற்று வருவதாகச் சொல்லப்பட்டது.
(‘When France fall some clever Brahmins in the south were said to be learning German to be ready for the Forthcoming takeover." - PP 74-75 of 'India Remembered by Percival and Margaret Spear, Orient Longman; 1981)
பின்னர் 1942 முற்பகுதியில் இட்லரின் கூட்டாளிகளான ஜப்பானியப் போர் வெறியர்கள் சிங்கப்பூர், பர்மா ஆகியவற்றையெல்லாம் பிடித்து முன்னேறி வருகிறார்கள் என்றவுடன் அந்த ஜெர்மன் (!) பார்ப்பனர்கள் ஜப்பானிய மொழியையும் படிக்கத் தொடங்கி விட்டனராம்.
(The "German Brahmins” of Madras were indeed said now to be learning Japanese (after Pearl Harbour and fall of Singapore and Burma) - P.78 of above book
பாவம் பார்ப்பனர்கள்! அவர்களுடைய கூட்டாளிகளான ஜெர்மானிய ஜப்பானிய போர்வெறியர்கள் இரண்டாம் உலகப் போரில் தோற்றுப் போய் விட்டனர் கடைசியாக! அவர்கள் சரியாக யக்ஞங்கள் நடத்தவில்லை போலும்!
No comments:
Post a Comment