* 69 நாள்களுக்குப் பிறகு சென்னையில் நேற்று (1.6.2020) ஆட்டோக்கள் இயக்கம். (சென்னையில் உள்ள மொத்த ஆட்டோக்கள் 90 ஆயிரம் - நேற்று மட்டும் ஓடியது 60 ஆயிரம்).
* இறுதி ஊர்வலங்களில் 20 பேர் வரை பங்கு கொள்ளலாம் என்பதற்குப் பதிலாக 50 பேர் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* நல வாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்கள் நிவாரண உதவி பெறுவதில் தடங்கல் - சிக்கல்!
* மாநிலங்களுக்கிடை யிலான போக்குவரத்துத் தொடங்கப்படாததால், தடைக்காலம் முடிந்தும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை - ஜூன் 15-க்குப் பிறகு செல்ல முடிவு.
* சுற்றுலாத் தளங்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.
* மாநிலங்கள் அவையில் காலியாக உள்ள 18 இடங்களுக்கு ஜூன் 19 அன்று தேர்தல்.
* கேரளாவில் 11 ஆம் வகுப்புத் தேர்வு எழுதவேண்டிய ஒரே ஒரு மாணவிக்காக தனிப்பள்ளியை ஏற்பாடு செய்து கொடுத்தது கேரள அரசு.
No comments:
Post a Comment