ஒற்றைப் பத்தி - இலெமூரியா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 8, 2020

ஒற்றைப் பத்தி - இலெமூரியா!

வரலாற்று நூல் - நில நூல்  (Geology), கடல் நூல் (Oceano Graphy), உயிர் நூல் (Biology), மாந்த நூல் (Anthropology) முதலிய பல நூல் ஆராய்ச்சியாளர்களும் குமரிக்கண்டமே (Lemuria) மாந்தன் பிறந்தகமாயிருத் தல் வேண்டுமென, ஓரிரு நூற்றாண்டுகட்கு முன்பே கூறிப் போந்தனர். மொழி நூலும், தமிழிலக்கியமும் அவர் தத்தம் நூற்சான்று கொண்டு செய்த முடிவை வலியுறுத்துகின்றன. இவ்வுண்மை இன்னும் மறையுண்டு கிடக்கிறது.


குமரிக்கண்டமே மாந் தன் பிறந்தகம் என்பதற்குக் காரணங்களாவன:



  1. மாந்தன் மட்டுமன்றி அவனுக்கு முந்திய விலங் கும், பறவையும் தோன்று முன்புகூட குமரிக்கண்டம் நீண்ட காலமாக நிலைத் திருந்ததென்று, யோவான் இங்கிலாந்து (John England)  கூறுகிறார்.

  2. முந்தியல் மாந்தருட் பெரும்பாலோர் தென் ஞாலத்திலேயே வாழ்கின் றனர். செவ்விந்தியரின் முன் னோரும், எசுக்கி மோவரின் முன்னோரும் தென் ஞாலத் தினின்றே ஆதியில் வட ஞாலத்திற்குச் சென்றனர்.

  3. பண்பாடு பெறாதன வும், இலக்கிய மில்லாதன வும், சொல்வளம் அற்றன வும், எட்டும் பத்தும் பன்னி ரெண்டுமாகச் சிறு தொகை யான மெய்யொலிகளைக் கொண்டனவுமான பழஞ்சிறு மொழிகள், தென் ஞாலத்திலேயே மிகுதியாக வழங்குகின்றன.

  4. மாந்தன் பிறந்ததாகக் கருதப்படும் பல்வேறு இடங் களுள் நன்னிலக் கோட் டைச் சார்ந்து ஞாலத்தின் நடுமையாக இருப்பது கும ரிக்கண்டமிருந்த இடமே!

  5. இப்போது கிடைத் துள்ள பழைய மாந்த எலும்புக் கூடுகளில் மிக முந்தியல் வாய்ந்தது, கும ரிக்கண்ட வெல்லையைச் சார்ந்த சாவகத்தில் எடுக்கப் பட்டுள்ளது.

  6. இனங்களின் தோற்றத் தில் மாந்தர்க்கு முற்பட்ட வையாகக் கொள்ளப்படும் முசு (Lemur), வானரம் (Monkey), கபி (Ape), மாந்தர்போலி (Anthropoid) என்னும் நால்வகைக் குரங் கும் குமரிக் கண்டத்திற் கேயுரியன.


குரங்கினங்களும், அநா கரிக மாந்தனும் இயற்கை உணவை உண்டு வாழ்வ தற்குப் போதிய வளச் சிறப்புடையது தென் ஞாலமே - அதிலும் குமரிக்கண்டமே! (தகவல்: திராவிட மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்).


 - மயிலாடன்


No comments:

Post a Comment