கருநாடக மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள மல்லிகார்ஜூன கார்கே நீண்ட கால பழுத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல் வாதி - நாடாளுமன்றத்திலும் கருநாடக சட்டமன்றத்திலும் நாற்பதாண்டு காலம் தன் முத்திரையைப் பொறித்தவர்.
மத்திய அமைச்சராகவும், சிறந்து விளங்கினார். கடந்த மக்க ளவைத் தேர்தலில் தோல்வியுற்ற அவரை மாநிலங்களவைக்குத் தேர்வு செய்ய முடிவு செய்தி ருப்பது சரியானதே !
ஒரு முறை மக்களவையில் மதச் சார்பின்மைபற்றி சூடாக விவாதம் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சைத் தொடர்ந்து தீப்பொறியாகக் கனன்று பதிலடி கொடுத்தார்.
இவர் இரண்டாவது முறை யாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந் தெடுக்கப்பட்டு உறுப்பினர் ஆன போது குளிர்காலக் கூட்டத் தொடரின் போது மதச்சார்பின்மை தொடர்பான விவாதம் நடந்தது, அந்த ஆண்டில் நாட்டில் மதவாத வன்முறைகள் ஆங்காங்கே நடந் ததால் நாட்டில் மதச்சார்பின் மைக்கு இடமில்லாமல் போய் விட்டது, என்று நாட்டின் மீது அக்கறை கொண்ட பல அறி ஞர்கள் கவலைப்பட்டனர். சிலர் மோடிக்கு கடிதம் எழுதியிருந் தனர். இது தொடர்பாக பேசிய உள்துறை அமைச்சர் ராஜநாத் சிங் ”அந்த காலகட்டத்தில் பலவிதங் களில் நெருக்கடிகள் இருந்த போதும் அம்பேத்கர் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூற வில்லை என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மல்லிக் கார்ஜுன கார்கே கூறியதாவது (25.11.2015).
"Even as he faced insults, Dr Babasaheb Ambedkar never thought about leaving India. He kept on presenting an objective point of view for a unified India," Singh said, in his introductory remarks to the debate on the constitution. Singh also brought up the addition of the words "socialist" and "secular" to the preamble of the Indian constitution, a much-derided act of former Prime Minister Indira Gandhi, although the Congress party continues to defend this. The home minister claimed that Ambedkar, the architect of the constitution, didn't feel the need to add those two words.This prompted a reply from Kharge on the comments. "I want to tell you that Dr Babasaheb Ambedkar wanted to put the words socialist and secular into the constitution, but he couldn't because of the atmosphere at the time," Kharge said. "Because of this, please stay away from controversial comments.
"Ambedkar wanted to run away? Wo toh mool bharatiya the. (He was an original Indian). You have come from abroad. All these Aryans have come from outside. We are the original inhabitants, the original Indians. We have defended India for 5,000 years.
அம்பேத்கர் அரசமைப்புச் சட்டத்தில் மதச் சார்பின்மை என்ற வார்த்தையைச் சேர்க்க எவ் வளவோ முயற்சி செய்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் இருந்த பார்ப்பனர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.
‘‘அம்பேத்கரும், நாங்களும் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் - மண்ணின் மைந்தர்கள்! ஆரியக் கூட்டமே ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு இங்கு வந்தது. எங் களுக்குத்தான் இந்த மண்ணின் உரிமை உள்ளது. ஆயிரம் ஆண்டு காலமாக ஆரியர்களின் கொடு மைகளைச் சகித்து வந்தோம்!’’ என்று ஆர்ப்பரித்தார்.
இப்பொழுது உள்ள சூழ் நிலையில் இத்தகையவர்கள் மாநி லங்களவையில் இடம் பெறுவது நல்லதுதானே!
- மயிலாடன்
No comments:
Post a Comment