டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- தெலுங்கானாவில் ஜூன் 8-ஆம் தேதி நடைபெற இருந்த எஸ்.எஸ்.சி. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. நீதிமன்றம் தேர்வு நடத்தலாம் என சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்த நிலையிலும், மாநிலத்தில் கரோனா பரவுதல் அதிகமாக இருப்பதால், தேர்வை தள்ளி வைத்திட அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.
- பீகாரில் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளதை யொட்டி, பிரதமர் மோடி தனது தேர்தல் பரப்புரையை அடுத்த வாரம் காணொலி மூலம் துவக்கிட உள்ளார்.
- கரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புவதற்கு 80% பெற்றோர் கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. இணையம் வழியே பாடங்கள் நடத்திடவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- சிறு, குறு தொழில்களுக்கு உரிய நிவாரணம் அளிக்காமலும், ஏழைகளுக்கு மாதம் ரூ.7500 பண உதவி அளிக்காமலும், மத்திய அரசு பொருளாதாரத்தைச் சீரழித்துவிட்டது என மோடி அரசை காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.
- அமெரிக்காவில் கருப்பர்களுக்கு எதிரான நிறவெறியில், இந்திய அமெரிக்கர்களின் மவுனம், அவர்களும் நிறவெறி ஆதரவாளர்களாக உள்ளதை வெளிக்காட்டியுள்ளது. இந்திய அமெரிக்கர்கள் ஒன்றும் குற்றமற்றவர்கள் அல்ல என இந்திய அமெரிக்க அமைப்பு தெரிவித்துள்ளது.
டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:
- கரோனா முழு அடைப்பையும் மீறி ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடி, அமெரிக்காவில் நிறவெறி காரணமாக ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:
- பிரதமர் மோடி வானொலியில் பேசியது போல், பொருளாதாரத்தை அவ்வளவு எளிதில் அவரால் மீட்க முடியாது. அவரிடம் உள்ள ஆலோசகர்களை நீக்கிவிட்டு, திறமையானவர்களை அமர்த்துவது நல்லது என மேனாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா, டில்லி பதிப்பு:
- கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில், இந்தியா, ஸ்பெயின் நாட்டையும் கடந்து உலக அளவில் அய்ந்தாம் இடத்தை அடைந்துள்ளது.
- மூச்சுவிட என்னால் முடியவில்லை என்ற வார்த்தைகள் அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுபோல், இந்தியாவிலும் ஏற்பட வேண்டும் என எழுத்தாளர் சோபா தே தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
- குடந்தை கருணா,
7.6.2020
No comments:
Post a Comment