விடுதலை வளர்ச்சி நிதி அறிவித்து தோழர்கள் உற்சாகம்
சேலம், ஜூன் 8 சேலம் மண் டல திராவிடர் கழகம் சார்பில் விடுதலை 86ஆம் ஆண்டு விழா காணொலி வழியாக 7.6.2020 அன்று காலை 11 மணி யளவில், மண்டல திராவிடர் கழகத் தலைவர் கவிஞர் சிந்தாமணியூர் சி.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் விடுதலை ஏட்டினை, தமிழர் தலைவர் ஆசிரியர் எத்தனை இடர்பாடுகளை தாண்டி நடத்தி வருகிறார்கள் என்பதை விளக்கி தொடக்கவுரையாற்றினார்.
கழகப் பேச்சாளர் இரா.பெரி யார் செல்வன் பங்கேற்று விடு தலையாகில் பெற்ற விடுதலை என்ற தலைப்பில் விடுதலை ஏட்டின் சாதனைகளை விளக்கி ஒரு மணி நேரம் உரை நிகழ்த்தினார். மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், மாநில மகளி ரணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி, மாநில ப.க. ஆசிரியரணி அமைப்பாளர் வா.தமிழ்ப் பிரபா கரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சுரேசு, மேட்டூர் மாவட்டத் தலைவர் க.கிருட்டிணமூர்த்தி, மாவட்டச் செயலாளர் எடப்பாடி கா.நா.பாலு, பொதுக்குழு உறுப்பினர் ஓமலூர் சவுந்தர்ராஜன், மேட்டூர் மாவட்ட ப.க. தலைவர் கோவி.அன்புமதி, மாவட்ட ப.க. செயலாளர் சி.மதிய ழகன், சேலம் மாவட்ட கழக செயலாளர் அ.ச.இளவழகன், சேலம் மாவட்ட துணைத் தலைவர் பரமசிவம், சேலம் மாநகர தலைவர் பா.வைரம், மாநகர செயலாளர் அரங்க.இளவரசன், ஆத்தூர் மாவட்ட கழக தலைவர் த.வானவில், மாவட்டச் செயலாளர் நீ.சேகர், ஆத்தூர் நகரத் தலைவர் வெ.அண்ணாத்துரை ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கி விடுதலை வளர்ச்சி நிதி அறிவித்து மகிழ்ந்தார்கள்.
நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட மகளிரணி தலைவர் சுஜாதா தமிழ்ச் செல்வன், ஆத்தூர் மாவட்ட இளை ஞரணி தலைவர் வாழப்பாடி வேல் முருகன், ஆத்தூர் மாவட்ட மாணவர் கழக தலைவர் கார் முகிலன், எடப்பாடி நகர தலைவர் இரவி, மண்டல மாணவர் கழக செயலாளர் தமிழர் தலைவர், மாநில பெரியார் மருத்துவரணி பொறுப்பாளர் கள்ளக்குறிச்சி டாக்டர் கோ.சா.குமார், விழுப்புரம் மண்டலத் தலைவர் குழ.செல்வராசு, மதுரை மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா, தர்மபுரி நகர தலைவர் கரு.பாலன், தருமபுரி மாவட்ட ப.க. ஆசிரியரணி அமைப்பாளர் கிருட்டிணமூர்த்தி, ஊற்றங்கரை சிவராசு, ஓசூர் மாவட்ட கழக தலைவர் சு.வன வேந்தன், பேராசிரியர் சாமிநாதன், தாம்பரம் இளையராசா, சோமசுந் தரம், இராணிப்பேட்டை சின்னத் துரை, தமிழ்குமார், ஆலங்குடி சந்திரகுமார் உள்ளிட்ட தோழர்கள் பங்கு பெற்று சிறப்பித்தார்கள்.
No comments:
Post a Comment