திருவாரூர், ஜூன் 7- திருவாரூர் மண்டல திராவிடர் கழகம் சார்பில் ஜூன் 2 ஆம் தேதி விடுதலை விளைச்சல் விழாக் கூட் டம் நடைபெற்றது. இதில், விடுதலை எனும் தாய்க்கு வயது 86. அதன் ஆசிரியர் எனும் மகனுக்கு 87 என உவமை பொருந்த எடுத்துக்கூறி உரையாற்றி னார்.
திருவாரூர் மண்டல திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற விடுதலை 86 ஆம் ஆண்டு விளைச்சல் விழா நிகழ் வில் திருவாரூர் மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். திருவாரூர் மண்டலத் தலைவர் ஓவியர் சங்கர் தலைமை வகித்தார். திருத்துறைப் பூண்டி மாவட்டத் தலைவர் கி.முருகய் யன், திருத்துறைப்பூண்டி மாவட்டச் செயலாளர் சு.கிருட்டினமூர்த்தி, நாகை மாவட்ட செயலாளர் ஜெ.பூபேஷ்குப்தா, மாநில விவசாய தொழிலாளரணி செய லாளர் இராயபுரம் கோபால், திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
திராவிடர் கழகப் பொதுச் செயலா ளர் இரா.ஜெயக்குமார் தொடக்கவு ரையாற்றினார். கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் சிறப்புரையாற்றினார்.
விடுதலை பாதுகாப்பு நிதி திரட்டுவோம்: இரா.ஜெயக்குமார்
விடுதலை 86 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘விடுதலை’ கடந்து வந்த பாதை குறித்து எடுத்துக்கூறினார்கள். அதன் பின்னர் நடைபெற்ற வினாவுக்கு விடையளிக்கும் நிகழ்வில் கேள்வி எழுப்பியத் தோழர்கள் வாட்ளஸ்அப் மூலமாக விடுதலை அனுப்புவதால் பொருளாதார இழப்பு ஏற்படுமே எனத்தெரிவித்தனர். அதற்கு விடையளித்தத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இழப்பை விட, இனமானமும் தன்மானமும் பெரிது என்றார். அப்போது, வாய்ப்புள்ளோர் விடுதலை வளர்ச்சி நிதி அளிக்கலாம் எனத்தெரிவித்தார்.
இந்நிலையில், நம் இனமானம் காக்க 86 ஆண்டுகள் தொய்வின்றி தொடரும் விடுதலையைக் காக்க விடுதலை பாதுகாப்பு நிதியை இந்த கூட்டத்தி லேயே அறிவிக்க வேண்டும் எனக்கூறி உரையாற்றினார்.
முனைவர் அதிரடி க.அன்பழகன் உரை:
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடாக இருப்பது விடுதலை. திராவிடர் கழகத் தின் கொள்கைகள் மேடையிலே பேசப் படும். அச்சாகி வெளியாகி வரும். கொள் கைகளை அசைபோடுவர்களுக்கு ஆதா ரமாக இருப்பது விடுதலை தான்.
அரசாங்கம் எப்படி கெசட் எனும் அரசாணை வெளியிடுகிறதோ. அதைப் போன்றது தான் விடுதலை நாளேடு. விடுதலை நாளேட்டில் வரும் தமிழர் ஆசிரியர் அவர்களின் அறிக்கைகள் தான் திராவிட இனத்தின் அரசாணை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
‘விடுதலை’யில் வரும் செய்திகள் வலிமையானது. விடுதலை ஆட்சியை மாற்றும் அதிகாரத்தை பெற்றிருந்தது. ஆதாரத்தோடு வெளிவருவதுதான் விடு தலை. உரிமைக்காக உழைத்து வருவது தான் விடுதலை. பெண் விடுதலை, ஒடுக் கப்பட்டோர் உரிமைகளைக் காக்க போராடுவது தான் விடுதலை. சமூகநீதி யைப் பாதுகாக்க விடுதலை செய்து வரும் பணி மகத்தானது. மக்களால் போற்றத் தக்கது.
சமூகநீதிக்கு ஆபத்து என்றால் அதை எதிர்த்து முந்திக்கொண்டு வெடிக்கும் பீரங்கி விடுதலை. எனவே, தான் ஆதிக்கவாதிகள் அதிகார வர்க்கத் தினர் விடுதலையைக் கண்டு அஞ்சுகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த விடுதலைக்கு 58 ஆண்டுகாலமாக தமிழர் தலைவர் அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்கள் விடுதலை நாளி தழை வீரமணியின் ஏகபோக உரிமைக்கு விட்டுவிடுகிறேன் என்று கூறினார் என்றால், விடுதலையை மட்டுமல்ல. இந்த இயக்கத்தையும், இயக்கத்தின் கொள்கைகளையும் சேர்த்துத்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண் டும்.
விடுதலை நாளிதழையும் ஆசிரியர் அவர்களையும் ஓர் உவமையாக கூற வேண்டுமானால், தாய்க்கு வயது 86. மகனுக்கு வயது 87. இங்கே தாய் என்பது விடுதலை. மகன் என்பவர் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். தமிழர் தலைவர் அவர்கள் விடுதலைக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்ற பின்னர், ‘விடுதலை‘ அரசின் அடக்குமுறை உள் ளிட்ட பல்வேறு இன்னல்களை கண்டு வந்திருக்கிறது. இழப்புகளை சந்தித்திருக் கிறது. இருந்தாலும் அது தொடர்ந்து இந்த இனத்தின் மீட்சிக்காக உழைத்து வருகிறது. எனவே, விடுதலையைப் பாது காப்போம். பரப்புவோம் எனப் பேசினார்.
நிகழ்ச்சியில், புதுவை மாநில திரா விடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன், திருவாரூர் மண்டல செயலாளர் ச.பொன்முடி, பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், கோவி.பெரியார்முரசு, கவிதா செந்தில்குமார், நாகை மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் இராச.முருகய்யன், திருக் குவளை கவியரசன், திருவாரூர் மாவட்ட ப.க செயலாளர் ரெ.புகழேந்தி, மாவட்ட ப.க தலைவர் சு.புயல்குமார், திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் சாமிநாதன், நன்னிலம் ஒன்றிய ப.க தலைவர் கரிகா லன், எரவாஞ்சேரி இராஜா, மாவட்ட இளைஞரணி தலைவர் பிளாட்டோ, திருவாரூர் நகர செயலாளர் ராமலிங்கம், விழுப்புரம் மண்டல செயலாளர் குழ. செல்வராசு, பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தங்கராசு, மதுரை மண்டலத் தலைவர் பவுன்ராசா, உரத்தநாடு உத்திராபதி, உரத்தநாடு அன்பரசு,
தஞ்சை ஏ.வி.எம்.குணசேகரன், பெரியார் புத்தக நிலைய வழக்குரைஞர் வீரமர்த் தினி, விமல்ராஜ், காரைக்குடி பழனி வேல், தஞ்சை நரேந்திரன், விருத்தாசலம் வெங்கட.ராசா, தஞ்சாவூர் வெங்கடே சன், ஆத்தூர் செல்வம், அறந்தாங்கி கதி ரேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் நிறைவில், திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் அருண் காந்தி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment