மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு பூஜ்யமா?
புதுச்சேரி, ஜூன் 9, மருத்துவக் கல்லூரியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அளிக்காத மத்திய அரசை கண்டித் தும், மின்துறை உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக் குவதை மத்திய அரசு கைவிட வலியுறுத்தியும் விடுதலை சிறுத் தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் புதுச்சேரியில் கட்சி அலுவலகம் முன்பு நேற்று நேற்று (8.6.2020) நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத தைகள் கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:.
"மருத்துவக்கல்லூரியில் இட ஒதுக் கீட்டுக்கு சட்டம் இயற்ற தமிழகம், புதுச்சேரி முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். #க்ஷிசிரியீஷீக்ஷீளிஙிசிஹீuஷீtணீ என்ற ஹாஷ்டேக் மூலம் நாடு முழுவதும் இந்த போராட் டத்தை முன்னெடுத்துள்ளோம்,
மத்திய அரசு கரோனா வைரஸை குறைக்க வழியை காணாமல் அதிகப்படுத்த வழிவகை செய்து வருகின்றது. கரோனா பரிசோதனை எண்ணிக்கை மிகச்சொற்பமாக உள்ளது. தமிழகத்திலும் பரிசோ தனை எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
மத்திய, மாநில அரசுகளின் கரோனா தடுப்பு பணிகளில் மன நிறைவு இல்லை. வருத் தத்தை அளிப்பதாக உள்ளது. கரோனாவால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை குறைத்துக் காண்பிப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இது ஆபத் தானது. ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு இப்போது பாதிப்பு அதிக அளவில் உள்ளது என்ற குற்றச் சாட்டை ராகுல் காந்தி தெரிவித் தார். இக்குற்றச் சாட்டுக்கு மத்திய அரசிடமிருந்தும், பிரதமர் மோடியிட மிருந்தும் மறுப்பு இல்லை.
10ஆம் வகுப்பு தேர்வினை தள்ளிப் போடுவதைவிட ரத்து செய்ய வேண் டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடாகும். பத்தாம் வகுப்பு மாண வர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.
சென்னையை 100 விழுக்காடு கட்டுப் பாட்டு மண்டலமாக மாற்றப் பட வேண்டும். வீடு வீடாக மக்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும். தனியார் மருத்துவமனை களில் அதிக கட்டணம் செலுத்தி அனைவராலும் சிகிச்சை பெற முடி யாது.
அதனால் தனியார் மருத்துவ மனைகளை ஆறு மாதங்களுக்கு அரசு தனது கட்டுப் பாட்டில் எடுக்க வேண்டும். தமிழகம், புதுச் சேரியில் 3 மாதத்திற்கு மின் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது. சிறு, குறு நிறுவனங்களி டமும் மின் கட்டணம் வசூலிக்கக் கூடாது"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment