சென்னை, ஜூன் 8, சென்னையின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 50 சதவிகிதத்துக்கும் மேல் வட சென்னையில் இருப்ப தால் அந்தப் பகுதியில் 7 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்வதாகவும், விரைவில் முறையான அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. சென்னையில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து முறையாக திட்டமிடாததால் ஏற்பட்ட தோல்வியே இதற்கு காரணம் என்ற புகார் எழுந்துள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் இதுவரை 20,993 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதம் பேர் வட சென்னைக்கு உட்பட்ட 6 மண்டலங்களில் இருப்பதாக கூறு கின்றன அரசின் புள்ளி விவரங்கள். சென்னை யின் பிற பகுதி களைவிட வடசென்னையில்தான் உயிரிழப்பும் அதிகமாக ஏற்படுகிறது.
Monday, June 8, 2020
வட சென்னையில் 7 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்த அதிகாரிகள் பரிசீலனை!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment