“நம்மவனுக்கு சற்று பணக்காரத் தன்மை வந்துவிட்டால் அவனுக்கு 'நாம் ஏன் கீழ்ஜாதி' என்றே படுவதில்லை. நம்மவருள் மிராசுதார், புலவர் என்பவருக்கும் 'நாம் ஏன் கீழ் ஜாதி' என்றே படுவதில்லை. நம்மவர் எவராவது இதுபற்றி சிந்தித்தது உண்டா? அது கிடையவே கிடையாது. எப்படி யாவது நமக்குப் பணம் வேண்டும்; எப்படியாவது மிராசு, மிட்டா என்று மற்றவன் சொன்னால் போதும் என்று கருதி கோயில் கட்டுவதும், பார்ப்பான் தன்னை தர்மப்பிரபு என்று சொன்னால் போதும் என்று கருதிக் கோயில் கட்டுவதும், கும்பாபிஷேகம் செய்வதும், 1000 ஏக்கர், 100 வேலி, 200 வேலி, 700 வேலி என்று காவிரிப் பாசனத்தில் எழுதி வைக்கிறானே, இதை எழுதி வைத்தவன் எல்லாம் நம்மவர்கள். அப்படிப்பட்ட நாம் ஏன் கீழ்ஜாதி? இப்படிப்பட்ட மக்களுடைய சரித்திரம் எப்படிப்பட்டது? நாம் உயர்ந்தவர்களாக வாழ்ந்ததாகத்தானே சரித்திரம் கூறுகிறது? பார்ப்பனர் வந்த பிறகு தானே நாம் “தாழ்ந்ததாக” உள்ளது? எந்த நாட்டிலாவது அந்த நாட்டு உழைப்பாளி - தர்மப் பிரபுக்கள் 'தாழ்ந்த ஜாதியாக' இருந்திருக் கிறார்களா?”
- தந்தை பெரியார்
(6.5.1954 உரையில்)
- ‘மணியோசை’
No comments:
Post a Comment