* இலவச மின்சாரத் திருத்தச் சட்டத்தத்தைத் திரும்பப் பெறவேண்டும்
* மருத்துவத் துறை, காவல்துறை, அரசுப் பணியாளர்கள் தன்னலமற்ற சேவைக்கு மனமுவந்து பாராட்டு
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
சென்னை, ஜூன் 1- இலவச மின்சாரத் திருத்தச் சட் டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தன்னலமற்ற வகையில் சேவை செய்து வரும் மருத்துவத் துறை, காவல்துறை, அரசுப் பணியாளர்கள் ஆகியோரின் பணி பாராட்டுக்குரியது என்றும் கூறும் திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம், கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் சார்பில் ரூ.7,500, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5000 அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
கரோனா பிரச்சினையில் மத்திய - மாநில அரசு களின் போக்குகள் போதுமான வகையில் இல்லலாம லும், திருப்தியற்ற வகையிலும் இருட்டடிப்பதும், பொதுமக்கள் பெரும் அவதிக்கும், துன்பத்துக்கும் ஆளாகியிருப்பதைச் சுட்டிக் காட்டி அனைத்துக் கட்சிக் கூட்டம் தனது கண்டனத்தைத் தெரிவித்து உள்ளது.
தீர்மானம் 2
கரோனா நோய்த் தடுப்பிலும்- ஊரடங்கிற்குப் பிறகான செயல் திட்டத்திலும் தோல்வியடைந்த
மத்திய- மாநில அரசுகளுக்குக் கண்டனம்!
அதிமுக அரசுக்கு, “கரோனா நோய்” ஜனவரி 7-ஆம் தேதியே தெரிய வந்தும் - மத்திய பா.ஜ.க. அரசுக்கு டிசம்பர் 2019லேயே தெரிந்திருந்தும், அரசியல் காரணங்களுக்காக, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் மேற்கொள்ளாமல், நாட்டு மக்களை பெரும் பாதிப்பிலும் துன்ப துயரங்களிலும் ஆழ்த்தியிருக்கும் அதிமுக அரசுக்கும்- மத்திய பா.ஜ.க. அரசுக்கும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மத்திய பா.ஜ.க. அரசைப் பொறுத்தவரை, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 10 சதவீதமான 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார நிவாரணத் திட்டம் என்று அறிவித்த பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் - அவரது நிதியமைச்சர் மூலம், 1.86 லட்சம் கோடி மதிப்புள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.91 சதவீத பொருளாதார நிவாரணத் திட்டத்தை மட்டும் வெளியிட்டு, நாட்டு மக்களை ஏமாற்றியிருப்பதோடு, மாநில அரசுகள் கோரும் நிதியையும் வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.
ஏழைகள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், சிறு - குறு - நடுத்தரத் தொழில் முனைவோர், மற்றும் நடுத்தர மக்களுக்கு, உண்மையிலேயே உதவிடும் வகையிலும், அடிப்படைப் பொருளாதாரத்தை ஊக்குவித்திடும் முறையிலும், ரொக்கமாக எவ்வித நிவாரண உதவியும் (சிணீsலீ ஸிமீறீவீமீயீ) அளிக்காமல் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டது. பொருளாதார ரீதியாக, கீழ் படிநிலைகளில் உள்ள 50 சதவீத குடும்பங்களுக்கு, ஊரடங்கு காலத் தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7500 ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கிட வேண்டும் என்பதையோ, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் மறு வாழ்விற்கு தேவையான பண உதவி செய்திட வேண்டும் எ ன்பதையோ, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை 200 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பதையோ, சிறிதும் காதில் போட்டுக் கொள்ளவில்லை மத்திய அரசு. தற்போது தினமும் அதிகரித்து வரும் கரோனா நோய் தொற்றை தடுக்கும் எவ்வித ஆக்கபூர்வமான பாதுகாப்புத் திட்டங்களும் இன்றி- மொத்தமாக தளர்த்தி- பெயரளவிற்கு ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது வேதனைக் குரியது. சென்னையில் பெருகி வரும் நோய் பாதிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஒட்டுமொத்தமாக ஊரடங்கினை படிப்படியாகத் தளர்த்தி வரும் மாநில அதிமுக அரசு, மக்களைப் பாதுகாக்கவும் திட்டமின்றி, கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அர சின் சார்பில் முழுமையான ஏற்பாடுகள் ஏதுமின்றி, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவ மனைகளுக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங் காமலும்; “ஊரடங்கிற்குப் பிறகான நிவாரணம் மற்றும் பொருளாதாரத் திட்டங்களும்” ஏதுமின்றி, மத்திய பாஜக அரசின் கையை எதிர்பார்த்து, செயலிழந்து நிற்கிறது. கரோனா பேரிடரால் 2020-2021 ஆம் ஆண்டிற்கான, மத்திய - மாநில அரசுகளின் நிதி நிலை அறிக்கைகளே செல்லும் திசை தெரியாமல் திகைத்து நிற்கின்றன.
கரோனா நோயைக் கட்டுப்படுத்த அதிமுக ஆட்சி தோல்வி கண்டுவிட்டது
கரோனா நோய் அதிகம் பாதித்த மாநிலங்களில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது மாநிலமா கவும், அதிக உயிரிழப்பு நிகழ்ந்ததில் தென்னகத்தில் முதல் மாநிலமாக இடம்பெறும் அளவிற்கு “கரோனா நோயை” கட்டுப்படுத்துவதில் அதிமுக ஆட்சி தோல்வி கண்டு விட்டது. தமிழ்நாட்டில் உள்ள கரோனா நோய் பாதிப்பில் சென்னை பத்தாயிரத் தையும் தாண்டி முதலிடம் வகிக்கிறது.
கட்டுக்கடங்காமல் தினமும் நோய்த் தொற்று பரவி வருவதையும், பரிசோதனை விவரங்களை மாவட்ட வாரியாக வெளியிட மறுத்து வெளிப்படைத் தன்மையைப் பின்பற்றுவதையும் மறுத்து வருவதை, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் அதிர்ச்சி யுடன் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.
அதிமுக அரசின் சார்பில் முறையான முன்னெச் சரிக்கை நடவடிக்கை இல்லை; ஊரடங்கு அறிவிப்பதில் குழப்பம்; ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பண உதவி அளிக்கவில்லை; தங்கள் உயிரை பணயம் வைத்து, மக்களைக் காப்பாற்றும் மருத்து வர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், தமிழக காவல்துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதது; அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும்- விவசாயத் தொழிலாளர் களுக்கும், விவசாயிகளுக்கும்- பாதிப்பிற்கும், வாழ் வாதார இழப்பிற்கும் உள்ளான யாருக்கும் உதவி செய்யாமல் கைவிரித்தது; அதிவிரைவு பரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் ஊழல்; “ஊரடங்கிற்குள் ஓர் ஊரடங்கை” அவசரகதியில் அறிவித்தது, தாய் மார்கள் கண்ணீர் சிந்தி - கைகூப்பி எதிர்த்தும், பிடி வாதமாக உச்சநீதிமன்றம் வரை சென்று ‘டாஸ்மாக்’ கடைகளைத் திறந்தது, அரசியல் கட்சிகளை அழைத்து- ஜனநாயக ரீதியில் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத் தைக்கூட்டி ஆலோசிக்காமல் புறக்கணித்தது, கரோ னாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தை யும் பரவலாக்காமல், மய்யப்படுத்தி முக்கியத்துவம் பெற முயற்சி செய்வது, என அனைத்து முனைகளிலும் தோல்வி கண்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிச் சாமி என்பதை இந்தக் கூட்டம் பதிவு செய்கிறது.
விளம்பரத்திற்காக மட்டுமே குழு ஆலோசனை!
ஊரடங்கிற்குப் பிறகு மாநிலத்தின் நிதி ஆதாரம், பொருளாதார மீட்சி, தொழில் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை முன்னெடுப்பதற்கான திட்டங்கள் ஏதுமின்றி, “விளம்பரத்திற்காக” மட்டுமே குழுஆலோசனைக் கூட்டங்களை நடத்தி; தினமும் பரவி தீவிரமாகி வரும் கரோனா நோய்த் தொற்று பற்றியும் - துயரத்தில் மூழ்கியுள்ள மக்களின் நிலை பற்றியும், கண்ணோட்டமின்றி இருப்பது கண்டனத் திற்குரியது. ஆகவே தமிழ்நாட்டில் - குறிப்பாக சென் னையில், கரோனா நோயைக் கட்டுப்படுத்தி, மக்களைக் காப்பாற்ற உடனடியாக ஆக்கபூர் வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. வேறு மாநிலங்களிலும், உலகத்தில் பல்வேறு இடங்களிலும் பணியாற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்திற்கு பாதுகாப்பாக திரும்ப மத்திய- மாநில அரசுகள் கட்டணம் ஏதுமின்றி, உரிய ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனக் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருப் போர்க்கு மத்திய அரசின் சார்பில் தலா 7500 ரூபாயும்; மாநில அரசின் சார்பில், பாதிக்கப்பட்டோர்க்கு 5000 ரூபாயும்; வழங்கிட வேண்டும் எனவும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மத்திய - மாநில அரசுகளை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 3
விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து
செய்யும் “புதிய மின்சாரத் திருத்தச் சட்டம் -2020”அய்த் திரும்பப் பெறுக!
கரோனா ஊரடங்கு நெருக்கடி நேரத்தில் “புதிய மின்சாரத் திருத்தச் சட்டம் -2020” மசோதாவின்மீது கருத்துக் கேட்கும் வைபவத்தை நடத்தி - நாட்டிற்கே முன்னோடியாக, தமிழகத் தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், முத் தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, அறிமுகப் படுத்தப் பட்டு, அனைத்து விவசாயிகளுக்கும் கடந்த 30 ஆண் டுகளாக வழங்கப்பட்டு, வேளாண்மை முன் னேற்றத்திற்கு அடிப்படையாக இருந்துவரும் இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்யவும், அதன் மூலமாக மாநில உரிமைகளை மேலும் பறித்திடவும், உள் நோக்கத்துடன் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
மாநில உரிமைகள் பறிப்பு
மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்க ளெல்லாம் மத்திய அரசின் நேரடிக் கட்டுப் பாட்டில் கொண்டு வருவது, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்குத் தலைவர் - உறுப்பினர்களைக் கூட மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் “தேர்வுக் குழுவே” நியமிப்பது, அய்ந்து பேர் கொண்ட அந்த தேர்வுக் குழுவில் இந்திய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களில் இருவரை மட்டுமே உறுப்பினர்களாக வைத்துக் கொள்வது, தமிழ் நாட்டில் உள்ள மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினரோ, தலைவரோ இல்லாமல் இருந் தால் - தமிழ்நாடு ஆணையத்தின் பணியை வேறொரு மாநிலத்தின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கவனிக்க மத்திய அரசு உத்தரவிடுவது, “மின் கொள்முதல், மின் விற்பனை, மின்சாரத்தை அனுப்புதல்” உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்கள் தொடர்பான தாவாக்களை, இனிமேல் மத்திய அரசின்கீழ் அமைக்கப்படும் “மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம்” (Electricity Contract Enforcement Authority) ஒன்றே தீர்வு காணும் என்பது - மாநிலங்களுக்கு எந்தவொரு பிரதிநிதித்துவமும் இல்லாமல் இப்படியொரு ஆணை யத்தை உரு வாக்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு வழி திறந்து; மாநில உரிமைகளைக் கையகப்படுத்திக் கொள்ளவும், விவசாயிகள் மற்றும் நெசவாளர் களுக்கான இலவச மின்சாரத்தையும், வழிபாட்டு தளங்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கான கட்டண சலுகைகளை ரத்து செய்யவும் கொண்டு வரப்படும்; இந்த “புதிய மின்சாரச் சட்டத் திருத்த மசோதாவை” உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய பா.ஜ.க அரசை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 4
தன்னலமற்று பணியாற்றும் மருத்துவர் - செவிலியர் தூய்மை பணியாளர் - சுகாதாரப் பணியாளர்கள் -காவல்துறையினரின் சேவைக்கு பாராட்டு
கரோனா பேரிடரிலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும் மிக முக்கியப் பணியில் மருத்து வர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், தமிழக காவல் துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் அ¬ னவரும் ஆற்றி வரும் தன்னலமற்ற சேவைக்கும், இரவு பகல் என்று பாராது உழைத்து வருவதற்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் மனமுவந்த பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது. ஊரடங்கு காலத்தில் மிகுந்த ஒத்து ழைப்பு நல்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம், இனி வரும் நாட்களிலும் அரசின் "சுகாதார அறிவுரை களுக்கு" மதிப்பளித்து கட்டாயம் முகக் கவசம் அணிந்து- சமூக இடைவெளியைக் கடைப் பிடித்து கரோனா நோய்த் தொற்றிற்கு எதிரான போராட்டத்தில் நாட்டிற்கே முன்னோடிகளாக விளங்கிட வேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.
No comments:
Post a Comment