'விடுதலை'யை நாடினால்  கெடுதலையை விரட்டலாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 9, 2020

'விடுதலை'யை நாடினால்  கெடுதலையை விரட்டலாம்!

கழக குடும்பங்களுக்கு பணிவான வணக்கம் நான் 5.6.1983 முதல் 'விடுதலை' வாசகன் என்று சொல்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!


பள்ளி இறுதி வகுப்பு வரை கூட படிக்காத நான் எனது பாடநூலாக கற்றது 'விடுதலை' ஏட்டைத்தான்!


தமிழன் வீடு என்றால் 'விடுதலை' படிக்க வேண்டும் என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் சொல்வார்கள்!


மும்பையில் 'விடுதலை' ஏட்டுக்கு முகவராக பெரியார் பெருந்தொண்டர் ஏ.பி.நெல்லையா இருந்த அந்த காலகட்டத்தில்   பெரியார் பெருந்தொண்டர் சீர்வரிசை சண்முக ராஜன், அண்ணன் உத்தமன் அவர்களுடைய அப்பா மலையாண்டி, வழக்குரைஞர் ராஜாமணி, இரத்தினசாமி, வடவை வின்சென்ட் அவர்கள் இப்படி பலருடைய வீடுகளுக்கு நாள் தோறும் சென்று 'விடுதலை'யை விநியோகித்து இருக்கி றேன் என்பதை நான் இன்று நினைத்துப் பார்க் கிறேன்!


எந்தப் பள்ளிக்கூடத்திலும் எந்த கல்லூரி யிலும் எந்த பல்கலைக்கழகங்களிலும் கிடைக் காத அரிய பல வாழ்வியல் கருத்துக்களை வாரி வாரி வழங்கும் அறிவுப்பேழையாக திகழும் நமது 'விடுதலை' 86 ஆண்டுகளாக தமிழர்களின் மானம் காக்கப் புறப்பட்ட அதன் பயணம்  தொடர்ந்து கொண்டே இருக்கும்  என்பதில் அய்யமில்லை! அதன் வழித்தடத்தில் நாம் பயணிப்போம் ,விடுதலை'யை நாடினால் நம்மைச்சூழும் கெடுதலையை விரட்டலாம்!


நன்றி வணக்கம்!


 பெ.கணேசன்.மும்பை


- - - - -


தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர் களுக்கு, வணக்கம்.


தாங்களும், குடும்பத்தில் உள்ள அனைவ ரின் நலனறிய ஆவல். கரோனா காலத்தில் 'விடுதலை' ஏடு படிக்கவும், பலருக்கு அனுப் பவும் வாய்ப்பு ஏற்பட்டது.


மாணவப் பருவந்தொட்டு இன்றுவரை விடுதலை படித்து வருகின்றேன். விடுதலையின் அளப்பரிய சமூக நீதி போராட்டத்தில் பலனடைந்த குடும்பத்தில் ஒருவனாக நன்றி உணர்வோடு, விடுதலையின் வெற்றிகளை நினைவு கூர்கின்றேன்.


தந்தை பெரியாரின் அறிவுரைகள், தங்களின் பேச்சு, எழுத்து, குறிப்பாக வாழ்வியல் சிந்தனை கள், சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற் படுத்துகின்றது. சமூக நீதி களத்தில் தங்களின் கருத்தினைத்தான் அனைத்து தலைவர்களும் எதிர்பார்க்கின்றார்கள் என்பதனை உணர்ந்து வருகின்றேன். 69 சதவிகித இடஒதுக்கீட்டில் 31சி சட்டத் திருத்தமே அதற்கு சான்று.


86 ஆண்டு கால விடுதலையில் 58 ஆண்டு காலமாக சமூகத் தொண்டாற்றி வரும் தங்க ளுக்கு எங்கள் குடும்பம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.


விடுலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 அனுப்பு வதில் பெருமையடைகின்றேன்.


அன்புடன்


நெடுவை. ந.நேரு, உரத்தநாடு


No comments:

Post a Comment