பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 4, 2020

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு


புதுடில்லி, ஜூன் 4 தமிழகத்தில் மருத்துவப் பட்ட படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, பல் மருத்துவப் படிப்பு, மருத்துவ டிப்ளமோ படிப்பு ஆகியவற்றில் மாநிலங்களால் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக (‘கோட் டா‘) ஒதுக்கப்படும் இடங்களில் 50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் நேற்று (3.6.2020) ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அந்த மனுவில் கூறப்பட்டு இருப்ப தாவது:-


தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில் மாநில அரசுக்கான ஒதுக் கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக் கான இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றி வருகிறது.


அதே நேரத்தில் தமிழகத்தில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50 சதவீத இடங் களை இதர பிற்படுத்தப்பட்டோர், பிற் படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் வகுப்பைச் சேர்ந்த மாணவர் களுக்கு ஒதுக்க வேண்டும். மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதி இருந்தும் அதை இதுவரை மத்திய அரசு அமல் படுத்தவில்லை.


மருத்துவப் பட்ட படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, பல் மருத்துவப் படிப்பு, மருத்துவ டிப்ளமோ படிப்பு ஆகியவற் றுக்கு மாநிலத்தின் மருத்துவக் கல்லூரி களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடங் கள் ஒதுக்கப்படுகின்றன. அப்படி ஒதுக்கப் படும் இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அதை இந்த கல்வி ஆண்டில் இருந்து அமல்படுத்த வேண்டும்.


இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட் டுள்ளது.


இதேபோன்ற கோரிக்கைகளுடன் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக் டர் அன்புமணி ராமதாஸ், தி.மு.க. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும் உச்சநீதிமன் றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டுள்ளன.


இந்த மனுக்கள் அனைத்தும் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


No comments:

Post a Comment