திருவெறும்பூர்,ஜூன் 7, காணொலி மூலம் திருவெ றும்பூர் ஒன்றிய கழகம் சார்பில் கழகப் பிரச்சாரக் கூட்டம் 12.5.2020 அன்று நடைபெற்றது.
திராவிடர் கழகம் என்பது ஒரு இயக்கம். அது எப் போதும் இயங்கிக்கொண்டே இருக்கும். நாள்தோறும் பொதுக்கூட்டம், தெருமுனைக்கூட்டம், கருத் தரங்கம், வாயிற்கூட்டம் என தொடர் பிரச்சாரமாக . தமிழனுக்கு மானமும் அறிவும் ஊட்ட பகுத்தறிவு பகலவனின் கருத்துகளை தமிழ்மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதையே வாழ்நாள் பணியாக கொண்டு செயல்படும் தமிழர் தலைவர் தலைமையிலே அதன் தொண்டர்கள் ராணுவ வீரர்களைப்போல் கட்டுப்பாட்டுடன் கடமை ஆற்றி வருவர்.
கரோனா வந்தது. கூடவே ஊரடங்கும் வந்தது. கொஞ்சநாள்தானே பொறுத்திருப்போம் என்று காத்திருந்தனர். ஊரடங்கு மேலும் மேலும் தொடர்ந்தது. இயங்கிக்கொண்டே இருந்தவர்களால் சும்மா இருக்க முடியவில்லை. அறிவியலின் வளர்ச் சியை அறிவுஊட்டும் கருத்துக்கு பயன்படுத்த காணொலி மூலம் தமிழர் தலைவர் தொண்டர்களுடன் உரையாடினார். மகிழ்ந்தனர் தோழர்கள்.
தலைவரின் வழிகாட்டுதலை முதல் பணியாக ஏற்று பிரச்சாரம் செய்ய அவர் காட்டிய வழியில் பயணித்தனர். ஆங்காங்கே காணொலி மூலம் கருத்தரங்குகள் தொடர்ந்தன. நம் பேச்சாளர்கள் உற்சாகமாய் கலந்துகொண்டு பேசினர். தோழர்கள் துள்ளிக்குதித்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர்.
திருச்சி மாவட்டம் சும்மா இருக்குமா? திருவெ றும்பூர் ஒன்றிய கலந்துரையாடல் காணொலியில் நடத்தினர். தொழிலாளர் கழகம் இயக்கப்பணியை தொய்வின்றி நடத்தியது. ஆசிரியர் அவர்கள் தொழிலாளர்களுடன் மேதின உரை நிகழ்த்தினார். உற்சாகமடைந்தனர் உழைப்பாளர்கள். திருவெறும் பூர் ஒன்றியம் கழக பேச்சாளர் புலிகேசியை பயன் படுத்தி பேச வைத்தது. 6-.05.-2020 அன்று "இன்று தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்" என்ற தலைப்பில் புலிகேசி உரையாற்றினார். 10-.5.-2020 அன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு மகளிரணி மகளிர் பாசறை அமைப்பாளர் மதிவதனியை வைத்து கருத்தரங்கம் நடத்தியது.
இந்நிலையில் திருவெறும்பூர் திராவிடர் கழகம் மாநில அளவில் கருத்து பிரச்சாரத்தை கொண்டு செல்ல நினைத்தது. மக்கள் ரசிக்கும் வண்ணம் நம் மக்களை வாட்டும் பிரச்சினையான கரோனாவை மய்யப்படுத்தி பட்டிமன்றம் நடத்த திட்டமிட்டது.
கரோனா வந்த பிறகு ஊரடங்கு ஊரடங்கு என தொடர்ந்து கொண்டே இருக்கிறதே இதற்கு என்ன காரணம்? யார் காரணம்? என்பதை மய்யப்படுத்தி பட்டிமன்றம் நடத்துகிறோம். நடுவராக இருந்து நடத்திக்கொடுங்கள் என செயலவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்த உடன் அட்டியின்றி ஒத்துக் கொண்டார் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக் கரசு அவர்கள்.
ஊரடங்கு நீடிக்க காரணம் அரசாங்கமே என வாதிட பூவை புலிகேசியும் சட்டக் கல்லூரி மாணவி சே.மெ.மதிவதனியும் தயாரானார்கள். அதனை மறுத்து ஊரடங்கு தொடர பெரிதும் காரணம் மக்களே என் வாதிட பேராசிரியர் மு.சு. கண்மணியும், கழக பேச்சாளர் என்னாரெசு பிராட்லாவும் ஆயத்தமாயிருந்தனர்.
இந்நிலையில் செயலவைத் தலைவரின் உடல் நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாய் அவரால் கலந்துகொள்ள இயலாத சூழல். துவண்டு விடு வார்களா நம் தோழர்கள்? நடுவராக புலிகேசி பதவி உயர்த்தப்பட்டு மதிவதனியோடு இணைந்தார் மகளிர் பாசறை செயலாளர் பா. மணியம்மை.
12--.5-.2020 மாலை 6.00 மணிக்கு பிரச்சாரப்போர் தொடங்கியது. திருச்சி மாவட்ட கழக தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை ஏற்றார். தொழிலாளரணி செயலாளர் சேகர் முன்னிலை ஏற்றார். பெல் ஆறு முகம் வரவேற் புரை ஆற்ற பட்டிமன்றத்தில் நோக் கத்தை நடுவர் புலிகேசி எடுத்துக்கூறி விவாதத்தை தொடங்கி வைத்தார்.
பேராசிரியர் கண்மணி ஊரடங்கு நீடிக்க காரணம் மக்களே என அடுக்கடுக்காய் காரணங்களை ஆதாரங் களோடு எடுத்து வைத்து பெரியாரியலையும் சேர்த்து கல்லூரியில் பாடம் நடத்துவதுபோல் அழகாக எடுத்து வைத்தார். பெரியாரின் கொள்கைப் பாரம் பரிய குடும்பத்திலிருந்து வந்தவரல்லவா?
இவர் எடுத்து வைத்த வாதத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் சே.மெ. மதிவதனி என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்க அவர் மட்டும் என்ன சாதாரணமானவரா ? செயல்வீரர் சேதுவின் மகளாயிற்றே . கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா என்று சொல்லும் வண்ணம் வழக்குரைஞ ருக்கே உரிய வாதத் திறனோடு பேராசிரியர் கண் மணியின் வாதத்திற்கு பதில் அளித்ததோடு ஊரடங்கு நீடிக்க பெரிதும் காரணம் மத்திய, மாநில அரசுகளின் மோசமான திட்டங்களே என்று ஆணித்தரமாக வாதிட்டார்.
இவர் பேசிய பிறகு என்ன பதில் சொல்லப் போகிறாரோ பிராட்லா என்று எல்லோரும் ஆவ லாய் காத்திருக்க நாலாம் தலைமுறை பெரியார் கொள்கைக் குடும்ப வாரிசு பிராட்லா, மதிவதனியின் வாதங்களுக்கு மறுப்பு சொல்லி ஊரடங்கு நீடிக்க காரணம் அரசு இல்லை. மக்கள்தான் என்று மட்டை க்கு ரெண்டு கீற்றாக எடுத்துக்காட்டினார்.
இவர் பேசிய பிறகு என்ன எதிர்வாதம் வைக்கப்போகிறார் மணியம்மை என்று ஆவலாய் அனைவரும் காத்திருக்க அவர் மணியம்மை அல்லவா? பெயருக்கேற்றாற்போல் மணி மணியாய் கருத்துகளை எடுத்துவைத்து அரசாங்கங்களின் செயலற்ற தன்மை, மத்திய அரசின் பாராமுகமும், மாநில அரசின் கையாலாகாத்தனமும் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்து சொன்ன பிறகும் சட்டமன்ற அதனைப் பொருட்படுத்தாத எடப்பாடி அரசின் அலட்சியப் போக்குமே காரணம் என்பதை ஆதாரங்களுடன் அடுக்கடுக்காய் எடுத்துரைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் உன்னிப்பாகக் கவனித்துக் கேட்ட தகுதிசான்ற நடுவர் புலிகேசி ஓர்ந்து கண்ணோடாது நீதி நெறி தவறாது நடுநிலையோடு இரு தரப்பின் நியாயத்தையும் எடுத்துச் சொல்லி ஊரடங்கு நீடிப்பதற்குக் காரணம் மக்களாக இருந்தாலும் பெரிதும் காரணம் மத்திய மாநில அரசுகளின் சரியான திட்டமிடல் இல்லா மையும் அலட்சியப் போக்குமே என்று தீர்ப்பளித்தார்.
செயலவைத்தலைவர் நடுவராக இருந்து தீர்ப்பளித்தால் எப்படி இருக்குமோ அதே நயத்தோடு தரத்தோடு திறம்பட கருத்துக்களை எடுத்து வைத்து தான் ஒரு தேர்ந்த வழக்குரைஞர் என்பதோடு ஒரு நீதியரசராக இருக்கக் கூடிய தகுதியும் தனக்குண்டு என்பதனை நிரூபிக்கும் வகையில் தீர்ப்பளித்தது அனைவராலும் பாராட்டப்பட்டது.
இறுதியாக ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் வ.மாரியப்பன் நன்றி கூறினார்.
இந்த காணொலியினை திறம்பட நெறிப்படுத்தி வழிநடத்தியவர்கள் பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சீரிய செயல்வீரர்கள் தோழர்கள் ஆண்டி ராஜ் மற்றும் அசோக்குமார் ஆகியோர். அவர்களது பணியினை அனைவரும் பாராட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து மாத்திரமல்லாமல் புதுச்சேரி, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் பிரான்சிலிருந்து தங்க.தமிழ்ச்செல்வன் போன்றோரும் கலந்துகொண்டு சிறப்பித்தது பெருமைக்குரியது.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத்தலைவர் வா.நேரு, மதுரை சுப.முருகானந்தம், அமைப்புச் செயலாளர் ஈரோடு சண்முகம், திருத்துறைப்பூண்டி புகழேந்தி, திருத்துறைப்பூண்டி கிருஷ்ணமூர்த்தி, அரக்கோணம் கு.சோமசுந்தரம், தர்மசேகர், திருவள் ளுர் சி.ந.வீரமணி, சோழவரம் சக்கரவர்த்தி, பழ.பிரபு, ஆந்திரா திராவிடநளன், வான்முடிவள்ளல், டாக்டர் தமிழ்மொழி, வழக்குரைஞர் வீரமர்த்தினி, சேத்துப் பட்டு நாகராசன், குடியாத்தம் அருள்மொழி, காஞ்சி கதிரவன், புதுச்சேரி சிவ.வீரமணி உள்ளிட்ட பிற மாநில, மாவட்டத் தோழர்களும், ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அம்பிகா, யாழினி, சாந்தி , ரூபியா, கவுரி , ரெஜினா, கியூபா, புனிதா, வில்வம்,கனகராஜ்,காமராஜ், ராமச் சந்திரன், சுரேஷ், சிவானந்தன், விஜய் யோகானந்த் , சுந்தரேசன், திலீப்குமார், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர் , பால்ராஜ் உட்பட பல திருச்சி மாவட்டத் தோழர்கள் திருவெறும்பூர் ஒன்றி யக்கழகத் தோழர்கள் பெல் திராவிட தொழிலாளர் கழகத் தோழர்கள், மகளிரணி தோழர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப் பித்தனர். இதுபோன்று மேலும் பல நிகழ்ச்சிகளை நடத்துங்கள் என்று பலரும் உற்சாகப்படுத்தினர்.
No comments:
Post a Comment