“உங்களை ஒன்று கேட்கிறேன். கடவுள் கடவுள் என்கிறீர்களே! எந்தக் கடவுள் நேராக வந்து 'நான் இருக்கிறேன்' என்று கூறிச் சென்றது?
எந்தக் கடவுள் உன்னிடம் வந்து 'என் கோயிலுக்கு வா' என்று சொன்னது? அப்படியிருக்கும்போது ஏன் கடவுள் கடவுள் என்று காலத்தையும், நேரத்தையும், வாழ்வையும் வீணாக்கிக் கொண்டிருப்பது?
உருவமில்லை கடவுளுக்கு என்கிறான். அப்படி என்றால் ஏன் கோயில் கட்டுகிறான்? அதற்குக் காரணம் சொல்லும்போது, உனக்காக கட்டவில்லை; பாமரனுக்காக, மடையனுக்காகக் கட்டியது என்கிறான்!
அப்படி என்றால் எவ்வளவு நாளைக்கு மனிதன் பாமரனாக, மடையனாக இருப்பது?”
- தந்தை பெரியார்
(நூல்: இனிவரும் உலகம்)
- ‘மணியோசை’
No comments:
Post a Comment