மாயூரம், ஜன 25 23.1.1955 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மாயூரம் திருவாரூர் ரோடு கடவுள் பித்தலாட்ட ஒழிப்பு மன்றத்திலிருந்து தோழர் எஸ். சிங்காரவேலு தலைமையில் கருஞ்சட்டை அணிந்த சுமார் 25 தோழர்கள் கஞ்சிரா, ஆர்மோனியம், ஜாலரா முதலிய பக்கவாத்தியத்துடன் வால்மீகி ராமா யணப் பாடல்களைப் பாடிக் கொண்டு ஊர்வலமாகப் புறப்பட்டனர். வழிநெடுக தாய்மார்களும், பொது மக்களும் ஆதரவு கொடுத்தனர். கண்ணாரத் தெரு அழகிரி படிப்பகம் வரும்போது ஓர் தோழர் ஆர்வத்துடன் ஆரிய ராமனைப்போல் கையில் மதுப் பாட்டிலுடனும், மாமிசத்துடனும், உச்சிக்குடுமி பூணூலுடனும் கண்டோர் நகைக்க பஜனையில் கலந்து கொண்டு கூறைநாடு 2ஆம் நெ. ரோடு மாயூரம் கடைத்தெரு, மகாதானத் தெரு முதலிய முக்கிய வீதி வழியாக வந்து இறுதியாக கடவுள் பித்தலாட்ட மன்றம் முன் சுமார் 11 மணிக்கு வந்த டைந்தனர். வழி நெடுக இயக்கத் தோழர்கள் மலர் மாலைகளும், தேநீர், சோடா பானங்களும் வழங் கினார்கள். வெள்ளாந் தெருவிலும், மன்றத்துக்கு எதிரிலும் ராமன் படத்தைக் கொளுத்தினர். அடுத்த ஞாயிற்றுக்கிழமை இதே பஜனையை வெகு சிறப்புடன் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இயக்கத் தோழர்கள் அதில் கலந்து கொண்டு ஊக்க மளிக்கவும் கோரப்படுகிறது.
('விடுதலை' 27.1.1955)
No comments:
Post a Comment