சென்னை, ஜூன் 9 ஆவடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பா.தென்னரசு தலைமையேற்றார். சிறப்பு அழைப் பாளராக மாநில அமைப்புச் செய லாளர் வி. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
தொழில்நுட்ப வசதி செய்து கொள்ள தாமதம் ஏற்பட்டதால், ஊரடங்கு தொடங்கி ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆவடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 7.-6.-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் க.இளவரசன் அனைவரையும் வரவேற்றுப் பேசி னார். தலைமையேற்ற மாவட்டத் தலைவர் பா.தென்னரசு கலந்துரை யாடல் கூட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினார். ஏறக்குறைய கலந்துகொண்ட தோழர்கள் அனை வரும் தந்தைபெரியார் 80 ஆண்டு களுக்கு முன்னர், “ஒருவரையொருவர் முகம் பார்த்து பேசும் வசதி வந்துவிடும்” என்று பேசிய தொலை நோக்குச் சிந்தனையைத் தொட்டுத் தான் பேசி வியந்தனர். இறுதியில், மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், தமிழர் தலைவர் ஆசிரியர் கட்டளையிட்டுள்ளபடி, விடுதலையை இயக்கத் தோழர்கள் அல்லாத நண்பர்கள், உறவினர் களுக்கு விடுதலையின் பிடிஎஃப் வடிவத்தை அதிக அளவில் பகிரச் செய்யவும், விடுதலைக்கான வளர்ச்சி நிதியை மற்ற மாவட்டங்களைப் போலவே கொடுக்கவேண்டும் என வும், கரோனா காலத்தில் ஏற்பட்டி ருக்கும் சுணக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர, விடுதலை விளைச்சல் விழாவை நடத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிப் பேசினார். காணொ லிக் கலந்துரையாடலை மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல் ஒருங்கிணைப்பு செய்தார்.
அமைப்புச் செயலாளரின் கருத்துப்படி, விடுதலை விளைச்சல் விழாவை நடத்துவது, விடுதலை வளர்ச்சி நிதியை வழங்குவது என்றும், மாவட்டத்தலைவரின் 106 வயது அன்னை காலமானதையொட்டி இரங்கல் தீர்மானமும் என மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அனைவரும் தீர்மானத்தை காணொலியில் கைகளை உயர்த்தி ஆதரித்தனர். பூவைத் தோழர் மணிமாறன் நன்றியுரை கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.
நிகழ்வில் மாநில திராவிட மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதி வதனி, மாவட்டத் துணைச் செய லாளர் சோபன்பாபு, செவ்வாய்ப் பேட்டையைச் சேர்ந்த கோரா,- ஹேமாமாலினி, பூவைத் தோழர்கள் பெரியார்மாணாக்கன், தொண்டறம், பொதுக்குழு உறுப்பினர் செல்வி, வெங்கடேசன், சவுமியா, அறிவுமதி, மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இராமதுரை, - கீதா ஆகி யோர் கலந்து கொண்டனர். மாவட் டத்திற்கு புதிதாகக் குடிபெயர்ந்துள்ள மாணவர் கழகத் தோழர் பிரவீண் தான் கலந்துகொண்டதோடு, ராகுல் என்ற மாணவத் தோழரையும் அறிமுகம் செய்தார். மாவட்டச் செயலாளர் க.இளவரசன் தஞ்சையிலிருந்தும், வை. கலையரசன், விஜய் ஆகியோர் அரியலூரிலிருந்தும், க.கலைமணி புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதியிலிருந்தும் காணொலிக் கலந்துரையாடலில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment