செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 29, 2020

செய்தித் துளிகள்....

* சாத்தான்குளம் - தந்தை, மகன் உயிரிழப்பு - சி.பி.அய். விசாரணைக்கு மாற்றம் - முதலமைச்சர் அறிவிப்பு.


* ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இன்று முதலமைச்சர் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை.


* தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் (வயது 25) போலீஸ் தாக்குதலால் மரணம்.


* உலகில் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 27 கோடி (2018 புள்ளிவிவரம்).


* கரோனா பரிசோதனையை வீட்டில் இருந்தபடியே செய்துகொள்ளலாம் - அய்.அய்.டி. உருவாக்கும் புதிய கருவி வருகிறது.


* கைது செய்யப்பட்டவரைக் காவல் நிலையத்தில் அடிப்பது சட்டப்படி தவறு - சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் கண்டிப்பு.


* திருப்பூர் அருகே கொடுமணல் ஆய்வில் 2300 ஆண்டு பழைமையான ஊது உலை கண்டுபிடிப்பு.


* கரோனாவால் உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்துக்கு தமிழக அரசு நிதி உதவி ரூ.5 லட்சம்.


* அடுத்த அதிபர் ஜோபிடன்தான் என்று - அவரை எதிர்த்துப் போட்டியிடும் இப்போதைய அதிபர் டிரம்ப் ஒப்புதல் வாக்குமூலம்.


* ‘ஆப்பிள்' நிறுவனம் 11 மொழிகளை மொழி பெயர்க்கும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. (புதிய திருப்பமே!)


No comments:

Post a Comment