வரலாறாகிய பெரியார் பதித்த கொள்கைத் தடங்கள் (3) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 8, 2020

வரலாறாகிய பெரியார் பதித்த கொள்கைத் தடங்கள் (3)


தாழ்த்தப்பட்டோரை தாழ்வாகக் கருதும் சூத்திரர்களுக்கு....


திராவிடர் கழகம்


வீண் ஜம்பம் செய்யவில்லை!


பொதுவாக தீண்டாமை ஒழிப்புக்காகவும், தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காகவும் பாடுபடு வதாக முன்னணியில் உள்ள பலரும் மற்ற உயர்ஜாதி பார்ப்பனீயத்தின் மென்குரல் போல, ஒரு செய்தியை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல ஏற்றி குறை கூறுவதும், அதனை இவர்களும் ஏற்று தாழ்த்தப்பட்ட சகோதரர்களின் நலஞ் சார்ந்து கூறுவதாக எண்ணி -, சரியாகவோ, தப்பாகவோ - பின்பாட்டுப் பாடுவது உண்டு.


தாழ்த்தப்பட்டோரைக் குறை கூறுவோருக்குப் பெரியார் கன்னத்தில் கொடுக்கும் அடி!


‘‘நீங்கள் மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும்  (Purity)''


‘‘உணவில் நீங்கள் மாட்டுக் கறி சாப்பிடுவதைக் கைவிட்டு, ‘சுத்த சைவர்களாக' உங்களைத் தீட்டி லிருந்து நீங்கள் அப்புறப்படுத்திக் கொள்ளுங்கள்.''


அதுபோலவே, பார்ப்பனர் மற்றும் பார்ப்பன ரல்லாத மட்டத்தில் உசந்த ஜாதியினர் போடும் வைதீக வேஷம் முதலியவற்றை அனுசரித்தல், பேசும்போதுகூட அக்கிரகாரத் தமிழில் ‘அவா, இவா' என்று பேசுதல், நாமம், விபூதி  பூசி பக்திப் பழங்களாகக் காட்சி அளிப்பது என்பதைப் புகுத் திடுவார்கள்.


(இதனை பிரபல சமூக ஆய்வாளர் பேராசிரியர் எம்.என்.சீனுவாஸ் அவர்கள் ‘‘சமஸ்கிருதமய மாக்கல்'' - Piocos of Sanskritisation -  என்று கூறுவார்).


அப்படிப்பட்டவர்களின் வாதத்தின் கன்னத்தில் அறைவதைப்போல தந்தை பெரியார் சரியான பதிலை அளித்தார் என்பதே இன்றைய இளைஞர் கள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய செய்தி யாகும்.


‘‘குடிக்கத் தண்ணீர் இல்லாதவர்கள் குளிப்பது எப்படி?''


‘‘வருமானம் இல்லாதவர்கள் மலிவான மாட்டிறைச்சியைத் தவிர வேறு எதை உண்ண முடியும்?''


‘‘எச்சிலையும், பூச்சி புழுக்களையும் உண்ணுகிற கோழியின் இறைச்சியைவிட, மலத்தினைத் தின் னும் பன்றியின் இறைச்சியைவிட, புண்ணாக்குத் தின்னும் மாட்டின் இறைச்சி எப்படி மோசமான தாகும்?''


‘‘மதுவையும், மாட்டு மாமிசத்தையும் தள்ளி னால்தான் உங்கள் ஜாதி உயரும் என்று சிலர் சொல்லும் அயோக்கியத்தனமான காரியத்தை ஒப்புக்கொள்ள முடியாது.


மது குடிப்பது என்னும் பழக்கம் பிறஜாதியின ரிடையேயும் உள்ளதே!''


தாழ்வு நிலையிலிருந்து மீண்டு வருவதற்கு இன்றியமையாததும், முதல் நிபந்தனையும் ‘‘சுய மரியாதை உணர்வுதான்.''


சாமி என்று ஏன் கும்பிடுகிறீர்கள்?


‘‘............உங்களிடம் சில குற்றங்கள் இருக்கின்ற தைச் சொல்லாமலிருக்க முடியவில்லை. அதாவது நீங்களாகவே உங்கள் ஜாதிக்கு இழிவு சம்பாதித்துக் கொள்கிறீர்கள். அனாவசியமாக, யாரைக் கண்டா லும் ‘‘சாமி'' என்று கும்பிடுகிறீர்கள். நீங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் உங்கள் இரத்தத்தில் கலந்திருக்கிறது. அதை மாற்றிவிட வேண்டும்.


(தொடரும்)


No comments:

Post a Comment