உரத்தநாடு ஒன்றியக் கழகத்தின் சார்பில் காணொலியில் நடைபெற்ற 'விடுதலை' வாசகர் விளைச்சல் பெருவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 6, 2020

உரத்தநாடு ஒன்றியக் கழகத்தின் சார்பில் காணொலியில் நடைபெற்ற 'விடுதலை' வாசகர் விளைச்சல் பெருவிழா


தஞ்சை,ஜூன் 6, உரத்தநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் விடுதலை - வாசகர் விளைச்சல் பெரு விழா 31.5.2020- அன்று காணொலிக் காட்சியாக நடத்தப்பட்டது. இந் நிகழ்விற்கு கழகத்தின் உரத்தநாடு ஒன்றியத் தலைவர் த.ஜெக நாதன் தலைமை வகித்தார். ஒன்றியச் செய லாளர் ரஞ்சித்குமார் அனைவரை யும் வரவேற்றார்.


பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரப்பாண்டியன், மாநில அமைப்புச் செயலாளர்கள் பொன் னேரி வி.பன்னீர்செல்வம், ஊமை.ஜெயராமன், மாநில மகளிரணி செய லாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகி யோர் முன்னிலை வகித்து உரை யாற்றினார்கள்.


கழகப் பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் தொடக்க வுரையாற் றினார். கழகப் பேச்சாளர். இரா.பெரியார்செல் வன் 86-ஆம் ஆண்டில் தடம் பதிக்கும் விடுதலை (உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ்) என்ற தலைப்பில் சிறப்புரையாற் றினார்.


அப்போது அவர் பேசுகையில், பெரியார் நாடு என்று நம்முடைய தமிழர் தலைவர்  ஆசிரியர் அவர் களால் அறிவிக்கப்பட்ட உரத்தநாடு எதைச் செய்தாலும் அதை நேர்த்தி யாகச் செய்யக்கூடிய பகுதியாகும்.


இன்றைக்கு விடுதலை நாளேடு தமிழகத்திலேயே அதிகமாக மக்கள் மத்தியில் போய்ச் சேரக்கூடிய அள வுக்கு களப்பணியாற்றுகிற தலை சிறந்த போரா ளிகளாக இருக்கக்கூடிய நிரம்பியிருக்கக் கூடிய பகுதி உரத்த நாடு. எனவே இந்த ஒரத்தநாட்டில் இன்று ஒரு பொருள் பொதிந்த நிகழ்ச்சியதாக ஒரு ஒன்றியத் தின் சார்பில் இந்த விடுதலை விளைச்சல் பெருவிழா என்ற ஒரு அற்புதமான நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக் கிறார்கள்.


இன்றைய காலக்கட்டத்தில் நாம் செய்ய வேண்டிய பொறுப்பாளர்கள் தோழர்கள் எல்லோரும் நம்மிடத்தில் எடுத்துச் சொல்லியிருந்தாலும் விடுதலை என்பது நம்முடைய இயக்க வரலாற்றில் மிகப் பெரிய ஒரு சரித்திரத்தைப் படைத்த ஏடாகும்.


காரணம் தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கு கிறபோது அன்றைக்கு அவர் தொடங்கிய ஏடுகளுடைய பட்டியலை நாம் எடுத்துப் பார்த்தால், குடிஅரசு என்ற ஏட்டினை 1925-ஆம் ஆண்டு தொடங்கினார்கள். அதற்குப் பிறகு 1928இ-ல் வேர்ல்டு என்ற ஆங்கில வார ஏடு தொடங்கப்பட்டது. 1933ஆம் ஆண்டு புரட்சி என்ற ஒரு வார ஏடு நடத்தப்பட்டன. 1934இ-ல் பகுத்தறிவு என்ற வார ஏடு தொடங் கப்பட்டு 1935இ-ல் மாத ஏடாக வரத்தொடங்கியது.


அப்படியெல்லாம் பல ஏடுகள் தொடங்கப் பட்டு நடத்தப்பட்டாலும் விடுதலை என்ற நாளிதழை இன்று உரத்தநாட்டில் நாம் கொண்டாடுவது என்பது பொருத்தமான நாளாகும். காரணம், இன்றைக்கு விடுதலைக்கு 85-வயது நிறைவு பெற்று நாளை 86-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கிறது. இன்று 85-வயது நிறைவு விழாவாகவும் நாளை 86-ஆவது வயது துவக்க விழா வாகவும் இந்த நிகழ்ச்சி அமையும் என்ற அளவிற்கு அமைந் துள்ளது.


1.6.1935-இல் விடுதலை வாரம் இரு முறை ஏடாகத்தான் அரையணா விலையில் தொடங்கப்பட்டது. அப் படித் தொடங்கப்பட்ட இந்த ஏடு 19- மாதங் களுக்குப் பிறகு அது தினசரி விடுதலை நாளேடாக மாற்றப்பட்டு அந்த விடுதலை நாளேடு அன்றைக்கு காலணா விலைக்கு விற்கப்பட்டது. இந்த விடுதலைக்கு பல பேர் ஆசிரி யர்களாக இருந் திருக்கிறார்கள்.


முதன்முதலில் விடுதலைக்கு ஆசிரியராக இருந்தவர் அறிஞர் டிஏவி நாதன் என்பவர் இருந்திருக் கிறார். அவருக்குப் பிறகு ஆசிரியராக இருந்தவர் பண்டித ரெங்கசாமிப் பிள்ளை என்பவர் இருந் திருக்கிறார். அவருக்கு அடுத்து பொன்னம் பலனார், அன்னை மணியம்மையார் என இவர்களெல்லாம் விடுதலைக்கு ஆசிரியர்களாக இருந்து பணியாற்றியிருக்கிறார்கள்.


பொறுப்பாசிரியர்களாக இருந்த வர்கள் பேரறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி போன்றவர்கள். இவர்கள் எல் லாம் பொறுப்பாசிரியர்களாக இருந்து  விடுதலை மிகச் சிறப்பாக வெளி வந்து கொண்டிருந்தது.


1962-இல், தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் நான் விடுதலையை நிறுத்தி விட்டு ஈரோட் டில் இருந்து கொண்டு அதை வார ஏடாக நடத்தலாம் என்று எண்ணியிருந்த வேளையில்தான் ஆசிரியர் வீரமணி விடுதலை நாளேட்டுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்க முன் வந்தார். அப்படி அவர் பொறுப்பேற்க முன்வந்த காரணத்தால்தான் விடு தலை யில் அதை தலையங்கமாக எழுதினார். அதற்குக் காரணம், அவரது வரலாற்றில் ஒருவரை வர வேற்கிறேன் என்றும், அவரிடத்தில் நான் ஒப்படைக்கிறேன் என்றும் பெரியாரால் வரவேற்கப்பட்டு தலையங்கம் எழுதி வரவேற்கப்பட்ட ஒரே தலைவர் நம்முடைய தமிழர் தலைவர்  ஆசிரியர் வீரமணி அவர்கள் தான்.


பெரியார் சொல்கிறார், வீரமணியிடம் விடுதலையை ஏகபோக உரிமைக்கு ஒப்படைத்து விட்டேன் என குறிப்பிட்டார்கள். அப்படி ஒப்படைக்கப்பட்ட ஒரு ஏடு கிட் டத்தட்ட 58-ஆண்டு காலம் ஒரு பத்திரிகைக்கு ஒருவர் ஆசிரியராக இருந்த வரலாறு உலகத்திலேயே அரை நூற்றாண்டு காலத்தைக் கடந்து ஆசிரியராக இருந்த பெருமை நம்முடைய தமிழர் தலைவர்  வீரமணி அவர்கள் ஒருவ ருக்குத்தான் உண்டு.


காரணம் 29-வயதிலே விடுதலைக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று இன் றைக்கு வரைக்கும் ஒருநாள்கூட நிற்காமல், இன்னும் சொல்லப் போனால் ஒரே வண்ணத்தில் நான்கு பக்கத்தில் வெளிவந்த விடுதலையை எட்டுப் பக்கமாக மாற்றி, அது பல வண்ணத்தில் வெளிவரக்கூடிய வாய்ப்பை ஏற்படுத் தியது விடுதலை நாளிதழைத் தவிர வேறு எந்த நாளிதழும் கிடையாது.


எனவே அப்படியொரு மிகப் பெரிய வளர்ச்சியை இந்த ஏடு பெற் றிருந்தாலும் குறிப்பாக விடுதலை நாளேடு என்பது தமிழினத்துக்கு வருகிற கெடுதலைத் தடுக்கிற ஒரு கேடயம்தான். நாம் இன் றைக்கு அதைப் பரப்ப வேண்டும் என் பதற்கும் அது மக்கள் கைகளில் தவழ வேண்டும் என்பதற்கும் நாம் கொண்டு போய் மக்களிடத்தில் சேர்க்க வேண்டும் என்பதற்கும் அடிப்படைக் காரணம் இன்றைய நாளில் நாடு முழுவதும் நடைபெறுகிற மதவாதம், ஜாதிய வாதம் இவை தலைவிரித்து ஆடுகிற இந்தக் காலக் கட்டத்தில்  விடுதலை என்ற ஒரு நாளிதழ்தான் அந்தப் பணியை முறியடிக் கிற ஒரு வாய்ப்பாக நமக்கு ஆயுதமாகக் கிடைத்திருக்கிறது.


பல பெரிய பெரிய இயக்கங்கள் ஏடுகள் நடத்தியிருக்கின்றன. அவர் களால்கூட ஏடுகள் தொடர்ந்து நடத்த முடியவில்லை. ஆனால் நம் திராவிடர் கழகம் தொடர்ந்து நடத்தி வருகிறது. மதவாதம், ஜாதியவாதம் போன்றவற்றிற் கெல்லாம் சரியான கேடயம் விடுதலை நாளேடுதான்.


இவ்வாறு இரா.பெரியார் செல்வன் பேசினார்.


இந்நிகழ்வில் மேலும் அயல்நாடு களில் இருந்த தங்க.ரமேஷ், துரை.ராயப்பன், மருந்தியல் பதிவாளர் தோழியர் தமிழ் மணி, உரத்தநாடு ஒன்றியப் பெருந் தலைவர் பார்வதி, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கோபு.பழனி வேல் உள் ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment